»   »  ப்ரீத்தி கடத்தல்?!

ப்ரீத்தி கடத்தல்?!

Subscribe to Oneindia Tamil

தலைமறைவாக உள்ள ப்ரீத்தி வர்மாவைக் கண்டுபிடிக்க தனிப்படை ஒன்றை சென்னை காவல்துறை அமைத்துள்ளது.

18 நாட்களுக்கு முன் காணாமல் போனார் 18 வயசு புயலே பட நாயகி ப்ரீத்தி வர்மா. கிளாமர் வேடங்களில் கலக்கி வந்த ப்ரீத்தி, ராஜமுந்திரிக்குஷூட்டிங்குக்குப் போன இடத்தில் திடீரென மாயமானது கோலிவுட்டை பெரும் குழப்பு குழப்பியுள்ளது.

யாருடன் ஓடினார், ஏன் போனார், எங்கே இருக்கிறார் என்பது தெரியாமலும், அவரது மாயம் குறித்து பலவிதமான தகவல்கள் வந்த வண்ணமாகஇருப்பதாலும் திரையுலகினர் மட்டுமல்லாமல் காவல்துறையும் படு குழம்பு குழம்பியுள்ளது.

சிந்துபாத் கதை போல ப்ரீத்தி தலைமறைவு பெரும் மர்மமாக நீடித்து வரும் நிலையில் அவரைத் தேடிக் கண்டுபிடிக்க தனிப்படை ஒன்றைசென்னை காவல்துறை ஆணையர் லத்திகா சரண் அமைத்துள்ளாராம்.

கடத்தப்பட்டார்?:

இதற்கு முக்கியக் காரணமாக கூறப்படுவது, ப்ரீத்தி உண்மையிலேயே கடத்தப்பட்டிருக்கலாம் என்று காவல்துறை நம்ப ஆரம்பித்திருப்பதுதான்.இதைத் தொடர்ந்தே தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்தத் தனிப்படை போலீஸார் மும்பைக்கும், ஹைதராபாத்துக்கும் சென்று விசாரணைநடத்தவுள்ளனர்.

புதுக் கடிதம்:

இதற்கிடையே ப்ரீத்தி வர்மாவின் பெயரில் காவல்துறைக்கு புதிதாக ஒரு கடிதம் வந்துள்ளது. ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள அந்தக் கடிதத்தில்,நான் காதலருடன் சந்தோஷமாக வாழ்க்கை நடத்தி வருகிறேன். என்னைத் தயவு செய்து தேட வேண்டாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இக்கடிதத்தில் உள்ள கையெழுத்தும், முன்பு ப்ரீத்தி பெயரில் வந்த கடிதத்தில் உள்ள கையெழுத்தும் ஒன்றா என்பதை அறிய தடயவியல் துறைக்குஅக்கடிதத்தை காவல்துறை அனுப்பியது. இரண்டு கடிதங்களிலும் உள்ள கையெழுத்து ப்ரீத்தியுடையதுதான் என்று தடயவியல் நிபுணர்கள்உறுதிப்படுத்தியுள்ளனர்.

தொடர்ந்து ப்ரீத்தி விவகாரத்தில் மர்மம் நிலவுவதால் கோலிவுட்டில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil