»   »  இறங்கி வந்த பெற்றோர்- என்று ப்ரீத்தி ரிலீஸ்?

இறங்கி வந்த பெற்றோர்- என்று ப்ரீத்தி ரிலீஸ்?

Subscribe to Oneindia Tamil

ப்ரீத்தி வர்மாவின் காதல் கல்யாணத்தை ஏற்பதாகவும், இனிமேல் நடிக்கச் சொல்ல அனத்த மாட்டோம் எனவும் அவரது பெற்றோர் போலீஸில்தெரிவித்துள்ளனர். இதனால் ப்ரீத்தி வர்மா இன்று அல்லது நாளைக்குள் வெளியுலகுக்கு முகம் காட்டுவார் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

ராஜமுந்திரிக்கு ஷூட்டிங்குக்குப் போன ப்ரீத்தி வர்மா அப்படியே எஸ்கேப் ஆகி விட்டார். அவரை அருண், மகேந்திரன், விஜய் ஆகியோர்கடத்திச் சென்று விட்டதாக அடுத்தடுத்து ப்ரீத்தியின் பெற்றோர் குற்றம் சாட்டினார். ஆனால் ப்ரீத்தி விவகாரம் தொடர்பாக எந்த துப்பும்கிடைக்காமல் போலீஸார் குழம்பியிருந்தனர்.

இந்த நிலையில் தன்னை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி பெற்றோர் சித்திரவதை செய்வதாக ப்ரீத்தி வர்மா, போலீஸாருக்கு கடிதம் எழுதி பரபரப்பைஏற்படுத்தினார். இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு மீண்டும் ஒரு கடிதத்தை அனுப்பியிருந்தார். அதில் தனது காதலருடன் சந்தோஷமாககுடும்பம் நடத்துவதாகவும், தன்னைத் தேட வேண்டாம் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்தப் பின்னணியில் ப்ரீத்தி படத்துக்கு மாலை போட்டு, எள்ளும், தண்ணீரும் தெளித்து தலை முழுகி விட்டதாக கூறிய அவரது பெற்றோர்தற்போது இறங்கி வந்துள்ளனர். மகளுடைய காதலையும், கல்யாணத்தையும் ஏற்பதாகவும், இனிமேல், நடிக்கச் சொல்லி கட்டாயப்படுத்தமாட்டோம் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

ப்ரீத்தி கடைசியாக அனுப்பிய கடிதத்தைப் பார்த்த பின்னரே அவர்கள் மனம் மாறியுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை கே.கே.நகர் காவல் நிலையம் வந்தஅவர்கள், ப்ரீத்தியின் கல்யாணத்தை ஏற்றுக் கொள்வதாக எழுதிக் கொடுத்தனர்.

அதில், ப்ரீத்தி வர்மா, தனது கணவருடன் விரைவில் வீடு திரும்ப வேண்டும். அவர்களை ஆசிர்வதிக்க நாங்கள் தயாராக உள்ளோம்.அவர்களுடைய புதிய வாழ்க்கைக்கு நாங்கள் இடையூறாக இருக்க மாட்டோம். சினிமாவில் நடிக்கும்படி கட்டாயப்படுத்தவும் மாட்டோம் என்றுதெரிவித்துள்ளனர்.

ப்ரீத்தியின் தாயார் ரம்யா கூறுகையில், ப்ரீத்தியை மன்னித்து ஏற்றுக் கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம். அவள் போன பிறகு நாங்கள்அவசரப்பட்டு சில காரியங்களை செய்து விட்டோம். அது தவறு என்பதை இப்போது உணர்ந்து விட்டோம்.

ப்ரீத்தி மீது அவளுடைய தம்பி பப்புவுக்கு மிகுந்த பாசம் உண்டு. அவள் போனதிலிருந்து அவன் வாடிப் போய் விட்டான், ஏங்கிப் போய்விட்டான். அக்காவை எப்போது சந்திப்போம் என்று அழுது கொண்டிருக்கிறான்.

இனிமேல் நாங்கள் அவளை நடிக்க வேண்டும் என கட்டாயப்படுத்த மாட்டோம். தயவு செய்து ப்ரீத்தி எங்கிருந்தாலும் உடனடியாக வீடு திரும்பவேண்டும். இதுதான் எங்களது ஒரே கோரிக்கை என்று கண்ணீர் மல்கக் கூறினார்.

ப்ரீத்தியின் பெற்றோர் அவரது காதல் கல்யாணத்தை அங்கீகரித்து விட்டதைத் தொடர்ந்து இன்று அல்லது நாளைக்குள் ப்ரீத்தி சென்னைக்குத்திரும்பி விடலாம் என போலீஸாரும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, கே.கே.நகர் போலீஸ் நிலையத்துக்கு ஒரு எஸ்.எம்.எஸ். செய்தி வந்துள்ளது. அதில் காதலருடன் ப்ரீத்தி வர்மா பத்திரமாக இருப்பதாககூறப்பட்டிருந்தது. இதை யார் அனுப்பியது என்று போலீஸார் விசாரித்தபோது, தனது தாயிடமிருந்து ப்ரீத்தி வாங்கிச் சென்ற செல்போனிலிருந்து எஸ்.எம்.எஸ். வந்ததுதெரிய வந்தது.

எனவே இதை ப்ரீத்திதான் அனுப்பியிருக்கக் கூடும் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். மேலும் அவர் சென்னையில்தான் பதுங்கியுள்ளதாகவும் போலீஸார்நம்புகின்றனர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil