»   »  ப்ரீத்திக்கு மனநிலை பாதிப்பு?

ப்ரீத்திக்கு மனநிலை பாதிப்பு?

Subscribe to Oneindia Tamil

மன நலம் பாதிக்கப்பட்ட நிலையில் சென்னையில் உள்ள ஒரு மருத்துவனையில் நடிகை ப்ரீத்தி வர்மா சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

ப்ரீத்தி வர்மா காணாமல் போய் சரியாக இன்றோடு ஒரு மாதம் ஆகிறது. ராஜமுந்திரிக்கு ஷூட்டிங்குக்குப் போன ப்ரீத்தி வர்மா அங்கிருந்துமாயமாகி விட்டார். யாருடன் அவர் போனார் என்பதில் பெரும் குழப்பம் நிலவி வந்தது.

இடையில் அவரிடமிருந்து போலீஸாருக்கு சில கடிதங்கள் வந்தன. முதலில் வந்த கடிதத்தில் தனது பெற்றோர் தன்னை விபச்சாரத்தில்ஈடுபடுத்துவதாக ப்ரீத்தி வர்மா குற்றம் சாட்டியிருந்தார். அடுத்து வந்த கடிதங்களில் தான் காதலருடன் சந்தோஷமாக இருப்பதாகதெரிவித்திருந்தார்.

அதன் பின்னர் ப்ரீத்தி குறித்து எந்தத் தகவலும் இல்லை. இந்த நிலையில், ப்ரீத்தி வர்மா சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மன நலம்பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் பரவியது. இதையடுத்து செய்தியாளர்கள் அங்கு விரைந்தனர். ஆனால் மருத்துவமனை நிர்வாகம்யாரையும் அனுமதிக்க மறுத்து விட்டது. இதனால் ப்ரீத்தி அங்குதான் இருக்க வேண்டும் என்பது உறுதியானது.

ப்ரீத்தி அங்கு இருப்பது காவல்துறைக்கும் தெரிந்திருக்கும் எனக் கூறப்படுகிறது. இதனால்தான் சமீப காலமாக அவர்கள் தேடுதல் வேட்டையைவிட்டு விட்டனர் என்று கூறப்படுகிறது.

ப்ரீத்தி வர்மா விவகாரம் விரைவில் ஒரு முடிவுக்கு வரும் என்று திரையலகம் எதிர்பார்க்கிறது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil