»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

புரட்சி படம் எடுப்பதாகச் சொல்லி பயமுறுத்தி வரும் வேலு பிரபாகரனின் காதல் அரங்கம் படத்தில் முழுமையாக டாப்-லெஸ் காட்சியில்நடித்துள்ளார் ஒரு நடிகை. அவரது பெயர் ப்ரீத்தி ரெங்கயானி.

இந்தப் படத்தில் ஒரு பக்கம் பெங்களூர் பெண் ஷெர்லி தாஸ் ஒரு கொசு வலையை உடம்பில் போர்த்திக் கொண்டு அருவியில் நனைந்துகிளுகிளுப்பூட்ட, இன்னொரு பக்கம் ப்ரீதியும் தன் பங்குக்கு அந்தக் கொசு வலை கூட உடம்பில் இல்லாமல் நடித்திருக்கிறார்.

இது குறித்து ப்ரீத்தி ரெங்கயானி கூறுகையில்,

நான் இந்தப் படத்தில் நிர்வாணமாக எல்லாம் நடிக்கவில்லை. டாப்லெஸ் காட்சியில் போல் தோன்றும் ஒரு காட்சியில் நடித்திருக்கிறேன்.அதையும் கூட முதுகுப் பக்கம் காட்டித் தான் நடித்தேன். இது கதைக்குத் தேவைப்பட்டதால் நடித்தேன். அதில் எந்தத் தப்பும் இல்லை என்றுதான் நினைக்கிறேன்.

அதே நேரத்தில் கதையில் வேண்டுமேன்றே திணிக்கப்படும் ஆபாச காட்சியில் நடிக்க மாட்டேன் (அடடே!!) என்றார் ப்ரீத்தி.

ப்ரீத்தியும் ஷெர்லியும் சேர்ந்து கொண்டு கவர்ச்சியைக் கொட்டோ கொட்டு என்று கொட்டியிருக்கும் இந்தப் படம் சென்சாரில் தப்பிவெளியே வருமா என்பதே சந்தேகம் தான் என்கிறார்கள் கோலிவுட்டில்.

வேலு பிரபாகரனே கதை, திரைக்கதை எழுதி தயாரித்து இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஒரு ஹீரோவும் இருக்கிறார். அவரது பெயர் ஷரத்செந்தில்.

படத்தை ஒருவழியாக முடித்துவிட்ட டைரக்டர் அடுத்த சில நாட்களில் சென்சாருக்கு பெட்டியைத் தூக்கிக் கொண்டு போக இருக்கிறார்.

இந் நிலையில் அவரே நிருபர்களிடம் பேசுகையில், சமூகத்தின் நடக்கும் பல தவறுகளுக்கும் காரணமே நம்மிடம் மேலாங்கியிருக்கும் காமஉணர்வு தான். மூடி மூடி வைப்பது தான் காமத்தை அதிகரிக்கிறது என்று ஓஷோவின் தத்துவத்தை எடுத்துவிட்டார்.

காதல் அரங்கம் படத்தில் ஷெர்லியும் ப்ரீத்தியும் புது நடிகைகள் தான். என்றாலும் மேலாடையின்றி தைரியமாக நடித்தார்கள். காதல்காட்சிகளில் யதார்த்தமாக நடித்தார்கள். இதில் ஆபாசமே இல்லை, யதார்த்தம் தான்.

படத்தை சென்சாட் அதிகாரிகள் வெட்டினால், ஐ.நா. சபை வரைக்கும் போவேன் என்று ஒரு போடு போட்டார்.

ஷெர்லியைப் போலவே ப்ரீத்தி ரங்கயானியும் பெங்களூர்காரர் தானாம். மாடலிங் செய்ய ஆசைப்பட்டு கோ-ஆர்டினேட்டர்களிடம்தன்னை பல விதத்திலும் படமெடுத்துத் தர அவர்கள் இவரை வேலு பிரபாகரனிடம் கொண்டு வந்து சேர்த்துவிட்டுவிட்டனர்.

கவர்ச்சியையும் தாண்டி இது ஒரு சவாலான பாத்திரம் என்பதால் ஏற்றுக் கொண்டேன் என்று தன் பங்குக்கு ஒரு போடு போட்டார் ப்ரீத்தி.

அவர் மேலும் சொன்ன தகவல், படத்தில் என்னைவிட அதிக தைரியமாய் கவர்ச்சி காட்டியது ஷெர்லி தான்....

இவர்களிடம் பேசியதை வைத்துப் பார்க்கும்போது படம் சென்சாரில் வதை (உதை) படப் போவது மட்டும் நிச்சயம் என்பதை யூகிக்கமுடிகிறது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil