ப்ரியா மணியும், பிருத்விராஜும்

பருத்தி வீரனுக்கு முன்பாக ப்ரியா மணி மலையாளத்தில் நடித்த படம் சத்யம். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் பிருத்வி ராஜ். இப்படத்தில் காவல்துறை அதிகாரியாக பிருத்வி ராஜ் நடித்திருந்தார்.
சத்யம் படத்தை இயக்கியவர் வினயன். என் மன வானில், அற்புதத் தீவு ஆகிய இரு படங்களை தமிழில் இயக்கியுள்ள வினயன், மலையாளத்தில் பல வெற்றிப் படங்களைக் கொடுத்தவர்.
அதிரடிப் படமாக அமைந்த சத்யம், மலையாளத்தில் பெரும் வெற்றி பெற்றது. இப்போது தமிழுக்கு வருகிறது. நீண்ட காலத்திற்கு முன்பு கமல்ஹாசன் நடித்த சத்யா படத்தின் பெயரை, இப்படத்திற்கு சூட்டியுள்ளனர்.
தமிழுக்காக காமெடியை புதிதாக இணைக்கின்றனர். காமெடி போர்ஷனை வடிவேலுவை வைத்து படமாக்கவுள்ளனர். இதுவரை எந்தப் படத்திலும் வந்திராத வகையில் இப்படத்தின் காமெடிக் காட்சிகளை அமைக்கவுள்ளனராம்.
Comments


Click it and Unblock the Notifications