பிரியதர்ஷனின் 'காஞ்சிபுரம்'!
பாலிவுட்டில் பிசியாக இருந்து வந்த மலையாளத்து பிரியதர்ஷன் அடுத்து தமிழுக்குத் திரும்பியுள்ளார். 'காஞ்சிபுரம்' என்று பெயரிடப்பட்ட படத்தில் அவர் படு பிசியாக உள்ளார்.
பட்டு நெசவாளர்களின் வாழ்க்கைத் துயரங்களை சித்தரிக்கும் படம்தான் காஞ்சிபுரம். பிரியதர்ஷன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் பிரகாஷ் ராஜ் நடிக்கிறார். செப்டம்பர் இறுதிக்குள் இப்படம் முடிவு பெறும் எனத் தெரிகிறது.
இதைத் தொடர்ந்து தமிழில் ஒரு படத்தை தயாரிக்கிறார் பிரியதர்ஷன். இப்படத்தை பாசில் இயக்குகிறார். பிருத்விராஜ் ஹீரோவாக நடிக்கிறார். ஹீரோயினாக நவ்யா நாயர் மற்றும் காவ்யா மாதவன் ஆகியோர் நடிப்பார்கள் எனத் தெரிகிறது. இப்படத்தின் ஷூட்டிங் அடுத்த வாரம் தொடங்குகிறது.
கடந்த மாதம் செய்தியாளர்களைச் சந்தித்த பிரியதர்ஷன், எதிர்காலத்தில் தமிழில் படங்கள் தயாரிக்கவும், இயக்கவும் போவதாக பிரியதர்ஷன் அறிவித்திருந்தார்.
சென்னையில் தான் செட்டிலாக உதவியது தமிழ் சினிமாதான். அதற்கு நன்றி செலுத்தும் முகமாக தமிழில் படங்கள் தயாரிக்கவும், இயக்கவும் திட்டமிட்டுள்ளதாக அப்போது அவர் தெரிவித்திருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
ஆனால் அவர் இயக்கும், தயாரிக்கும் படத்தில் தமிழ் ஹீரோவையோ அல்லது தமிழ் ஹீரோயினையோ போடாமல் முற்றிலும் மலையாளிகளை போட்டு வருவது ஏனோ?


Click it and Unblock the Notifications











