»   »  ஏப்ரல் 29 ல் பிரியாமணி- முஸ்தபா ராஜ் நிச்சயதார்த்தம்

ஏப்ரல் 29 ல் பிரியாமணி- முஸ்தபா ராஜ் நிச்சயதார்த்தம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் ரசிகர்களை கண்களால் கைது செய்த பிரியாமணியின் நிச்சயதார்த்தம் வருகின்ற 29ம் தேதி பெங்களூரில் நடைபெறுகிறது.

தமிழில் பிரியாமணியை அறிமுகம் செய்த பெருமை மூத்த இயக்குநர்களில் ஒருவரான பாரதிராஜாவையே சேரும்.

அறிமுகமானது கண்களால் கைது செய் என்றாலும் பெயர், புகழ், தேசிய விருது மூன்றையும் ஒருசேர பெற்றுக் கொடுத்த படம் பருத்தி வீரன் தான்.

Priyamani Engagement date now Revealed

தேசிய விருதை வென்றவருக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் தெலுங்கு மற்றும் கன்னடப் படங்களில் பிரியாமணி நடிக்கத் தொடங்கினார்.

ஒரு கிரிக்கெட் போட்டியில் தொழில் அதிபரான முஸ்தபா ராஜை சந்தித்த பிரியாமணி தொடர்ந்து அவரின் காதலியாக மாறினார்.

"நாங்கள் இருவரும் உயிருக்குயிராக காதலிக்கிறோம். இந்த ஆண்டு இறுதிக்குள் எங்களது திருமணம் நடைபெறும்" என்று பிரியாமணி சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

அதன்படி வருகின்ற 29ம் தேதி பிரியாமணி- முஸ்தபா ராஜ் நிச்சயதார்த்தம் வருகின்ற 29ம் தேதி பெங்களூரில் நடைபெறுகிறது.

நிச்சயதார்த்தத்தில் இருவரின் திருமணத் தேதியும் முடிவு செய்யப்படவுள்ளது. இதனால் தன்னுடைய கையில் இருக்கும் படங்களை முடித்துக் கொடுப்பதில் பிரியாமணி தற்போது தீவிரம் காட்டி வருகிறார்.

English summary
Coming 29th Priyamani Engagement Held on Bangalore.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil