ஸ்பெஷல்ஸ்
- கன்னட வெறியர்களின் தாக்குதலுக்கு இலக்கான எச்டூஓ என்ற கன்னடப் படத்தில் (தமிழில் காவேரி என்ற பெயரில் டப் ஆகியுள்ளது) நடித்துள்ள பிரியங்கா திரிவேதிக்கு, தமிழில் நிறையப் படங்கள் புக் ஆகியுள்ளதாம். அஜீத்தின் ராஜா மூலம் தமிழுக்கு வந்தாலும் காவேரியில் இவர் அள்ளிவிட்ட கவர்ச்சியால் இப்போது தமிழில் வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.
- கோலிவுட் காரர்களுக்கு தேவயானி போரடித்து விட்டார் போல, கையில் இருக்கும் படங்கள் கறைகிறதே ஒழிய புதிய படங்கள் வருகை குறைந்து விட்டது.
- சுந்தரா டிராவல்ஸ் படத்தில் நான்தான் ஹீரோ, முரளி வெறும் டம்மிதான் என்று எல்லோரிடம் கூறி வரும் வடிவேலு மலையாளத்து வினயன் இயக்கும் அடுத்த படத்தில் உண்மையிலேயே ஹீரோவாகிறார்.
- ஸ்டூடண்ட் நம்பர் 1 படத்தின் சில காதல் காட்சிகளில் சிபிராஜும், ஷெரீனும் படு நெருக்கமாக நடித்துள்ளார்களாம். அப்பா சத்யராஜை முந்தி விடுவார் போல மகன் சிபி.
- மீரா ஜாஸ்மினுக்கும், மலையாள டைரக்டர் ஒருவருக்கும் கொஞ்ச காலமாக ஒரு இது உள்ளது எல்லோருக்கும் தெரியும். இதனால் தமிழ்ப் படங்களில் புக் ஆகாமல், மலையாளப் படங்களாக புக் செய்து வருகிறாராம். அப்போ தானே கேரளா பக்கமே இருக்க முடியும், காதலருடனேயே இருக்க முடியும்.
Comments
cinema deepam director glamour heroine karthigai roja selvamani sex shop simple specials tamil news tamilnadu temple thatstamil


Click it and Unblock the Notifications