»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

மல்லா என்ற கன்னட படத்தில் ஆபாசத்தின் எல்லைக்கே சென்றுள்ளார் பிரியங்கா திரிவேதி

பிரியங்கா திரிவேதி பெங்காலி பெண் என்றாலும், மாநில எல்லைகளைத் தாண்டி கவர்ச்சி வெள்ளத்தைக் கரைபுரண்டோட வைத்தவர். தமிழில் காதல் சடுகுடு படத்தில் விக்ரமுக்கும், ஐஸ் படத்தில் அசோக்குக்கும் லிப் டூ லிப்கிஸ் கொடுத்து அசத்தியவர்.

அதிலும் குறிப்பாக காதல் சடுகுடு படத்தில் கிஸ் சீனை காலையில் இருந்து மாலை வரை படமாக்கினார்கள். சூட்டிங்முடிந்து வெளியே வந்த பிரியங்கா திரிவேதி, பாவம் விக்ரம்தான் ரொம்பவும் கஷ்டப்பட்டார் என்று கூலாகபேட்டி கொடுத்தார்.

தமிழில் காட்டோ காட்டு என்று கவர்ச்சி காட்டியும் வாய்ப்புகள் இல்லாததால், பிரபல கன்னட நடிகர்உபேந்திராவைக் கல்யாணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். கல்யாணத்துக்கு முன் அவர் நடித்து, இப்போதுவெளிவந்த படங்கள் உபேந்திராவுக்குப் பெரும் தலைவலியைக் கொடுத்துள்ளன.

சிவராஜ்குமாருடன் நடித்த ரெளடி அலியா படத்தில் பிரியங்கா காட்டியிருந்த கவர்ச்சி உபேந்திராவுக்குஅதிர்ச்சியைக் கொடுத்தது.

இப்போது ரவிச்சந்திரனுடன் இணைந்து நடித்த மல்லா படத்தில் பிரியங்கா முற்றும்துறந்த நிலைக்கு முத்திய நிலை வரை சென்றிருப்பது அவரது கணவரை நொந்து நொம்பலப்பட வைத்துள்ளது.

கன்னட உலகில் அஜால் குஜால் காட்சிகளுடன் படங்களை எடுப்பதில் பேர் பெற்றவர் ரவிச்சந்திரன். இவரதுலேட்டஸ்ட் படம்தான் மல்லா. இதில் ரவிச்சந்திரன் பிரியங்காவுடன் நெருக்கமாக நடித்த பல காட்சிகள் விரசத்தின்உச்சம். பிரியங்கா திரிவேதிக்கு லிப் டூ லிப் கிஸ் கொடுக்கும் காட்சிகள் மட்டும் குறைந்தது 50 இருக்கும்.

படத்தைப் பற்றிக் கேள்விப்பட்ட உபேந்திரா, 3 கோடி ரூபாய் கொடுக்கிறேன், படச்சுருளை என்னிடம் கொடுத்துவிடுங்கள் என்று கேட்டுள்ளார். ரவிச்சந்திரன் மறுத்து விட்டாராம். அட்லீஸ்ட் ஒரு குறிப்பிட்ட பாடல் காட்சியைமட்டுமாவது நீக்குங்கள் என்று கெஞ்சியுள்ளார். அதற்கும் நோ சொல்லிவிட்டாராம்.

படம் ரிலீஸாகி அனைத்து தியேட்டர்களிலும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்தின் மூலம்குறைந்து 5 கோடி ரூபாய் லாபம் பார்த்து விடுவாராம் ரவிச்சந்திரன். ஷகீலா படத்துக்கு டிக்கெட் கிடைக்காதவர்கள்எல்லாம் இந்தப் படத்துக்குத்தானே போகிறார்கள்.

இதில் பரிதாபத்துக்குரியவர் பிரியங்காவின் கணவர் தான்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil