»   »  டிஆர் அலம்பல் தயாரிப்பாளர் புலம்பல்

டிஆர் அலம்பல் தயாரிப்பாளர் புலம்பல்

Subscribe to Oneindia Tamil

சிம்புவால் நான் பட்டது போதும். என்னை இனிமேலும் சிம்புவும், அவருடைய அப்பா டி.ராஜேந்தரும்தொடர்ந்து வதைத்தால், அவர்களது பெயரை எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொள்வேன் என்றுவல்லவன் படத் தயாரிப்பாளரான தேனப்பன் மிரட்டியுள்ளது கோலிவுட்டை பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது.

முன்பு கமல்ஹாசனிடம் உதவியாளராக இருந்தவர் தேனப்பன். இப்போது பிரபல தயாரிப்பாளர்களில் ஒருவராகஉள்ளார். அவரது தயாரிப்பில் வந்த படம்தான் வல்லவன்.

வல்லவன் படத்தை சிம்பு இயக்கிய விதம், ஷூட்டிங் போன இழுபறி வேகம் உள்ளிட்டவற்றால் நொந்து போய்நூடூல்ஸாகி விட்டார் தேனப்பன். படத்தை முடித்து அது ரிலீஸாகப் போகும் நேரத்தில், தனது சம்பளப் பாக்கியைதந்து விட்டு படத்தை வெளியிடுங்கள் என்று பஞ்சாயத்துக் கூட்டினார் சிம்பு.

இதையடுத்து நடந்த பேச்சுவார்த்ததையில் தனது இயக்குநர் சம்பளத்தை (ரூ. 50 லட்சம்) விட்டுக் கொடுப்பதாகசிம்பு கூறினார். இதையடுத்து பிரச்சினை தீர்ந்து படம் வெளிவந்தது.

இந்த நிலையில் மீண்டும் ஒரு பிரச்சினையைக் கிளப்பியுள்ளாராம் சிம்புவின் டாடி. அதாவது வல்லவன்படத்தால் நஷ்டம் என்று கூறித்தான் சிம்புவிடமிருந்து 50 லட்சத்தை மிச்சப்படுத்தினார் தேனப்பன். ஆனால்வல்லவன் இப்போது நன்றாக ஓடுகிறது. எனவே அந்த 50 லட்சத்தை கொடுக்க வேண்டும் என்று கூறுகிறாராம்டி.ஆர்.

ஆனால் தேனப்பனோ அட போங்கப்பா என்று புலம்புகிறார். அய்யா, சிம்புவை வைத்து நான் படாதபாடுபட்டுவிட்டேன். தமிழ்த் திரையுலகில் உள்ள அத்தனை தயாரிப்பாளர்களுக்கும் இது தெரியும்.

இந்தப் படத்தால் எனக்கு எந்த லாபம் கிடைக்கவில்லை. ராஜேந்தர் சொல்வது போல ஒரு பைசா லாபம் கூடஎனக்குக் கிடைக்கவில்லை.

இப்போதுள்ள நிலையில் சிம்புவை வைத்து எந்தத் தயாரிப்பாளரும் படம் தயாரிக்க முன்வர மாட்டார்கள்.அப்படி யாராவது முன்வந்தால் யாரிடமாவது கடன் வாங்கியாவது அந்தத் தயாரிப்பாளருக்கு நான் 2 கோடிரூபாயை இலவசமாக தருகிறேன். சவாலாகவே இதைக் கூறுகிறேன்.

நிலைமை இப்படியிருக்க நான் லாபம் சம்பாதித்து விட்டதாக ராஜேந்தர் கூறுவதில் உண்மை இல்லை. என்னைதயவு செய்து விட்டு விடுங்கள். இனிமேலும், சிம்புவும், ராஜேந்தரும் என்னைக் கொடுமைப்படுத்தினால் நான்அவர்களது பெயரை எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டு விடுவேன் என்று புலம்பித் தள்ளுகிறார்தேனப்பன்.அடடா!

Read more about: producer pl tenappas woos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil