ரவியின் மாமியார் அடிமையாக்குனாங்க.. என்னதான் நடந்தது?.. தயாரிப்பாளர் கொடுத்த எக்ஸ்க்ளூசிவ் பேட்டி

சென்னை: காதலித்து திருமணம் செய்துகொண்ட ஆர்த்தியை பிரிவதாக கடந்த வருடம் அறிவித்தார் ரவி. அந்த முடிவுக்கு காரணம் கெனிஷாவுடனான உறவு என்று முதலில் தகவல் பரவியது. ஆனால் அதனை ரவி திட்டவட்டமாக மறுத்துவிட்டார். சூழல் இப்படி இருக்க சில நாட்களுக்கு முன்பு தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் திருமணத்துக்கு கெனிஷாவுடன் வந்த ரவி; தான் அவரைத்தான் மணமுடிக்கவிருப்பதாகவும் சமீபத்தில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஜெயம் படத்தில் அறிமுகமான ரவி ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களது திருமணத்துக்கு முதலில் ரவி வீட்டில் எதிர்ப்பு வந்தது. ஆனால் தனது வீட்டாரிடம் பேசி திருமணத்துக்கு சம்மதம் தெரிவிக்க வைத்தார் ரவி. திருமணம் செய்துகொண்ட அவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். கோலிவுட்டின் ஜாலி ப்ள்ஸ் ஃபேவரைட் ஜோடியாக வலம் வர ஆரம்பித்தார்கள் ரவியும் ஆர்த்தியும். ஆனால் கடந்த சில காலமாக அவர்களுக்குள் ஏற்பட்ட விரிசல் தொடர்ந்து அதிகரிக்க செய்தது.

அறிவித்த ரவி: இனியும் ஒத்து வராது என்று முடிவெடுத்த ரவி; ஆர்த்தியை பிரிவதாக கடந்த வருடம் அறிவித்தார். அவரது இந்த முடிவு தன்னிடம் கலந்தாலோசிக்காமலேயே எடுக்கப்பட்டது என்று கூறினார் ஆர்த்தி. அதனைத் தொடர்ந்து ஆர்த்தியும் அவரது தாயும் தன்னை முழு கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள் என்று ஏகப்பட்ட காரணங்களை கூறினார் ரவி. சூழல் இப்படி இருக்க கெனிஷா என்ற பாடகியுடன் ரவிக்கு பழக்கம் ஏற்பட்டதால்தான் இந்த முடிவை அவர் எடுத்திருப்பதாகவும் ஒருதரப்பினர் பேச ஆரம்பித்தார்கள்.

Producer T R Ramesh Exclusive interview About Ravi Mohan - Aarti Issue Original

கெனிஷாவுடன் வந்த ரவி: ஆனால் அதனை முதலில் திட்டவட்டமாக மறுத்த ரவி; சமீபத்தில் நடந்த தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகளுக்கு நடந்த திருமணத்துக்கு கெனிஷா பிரான்சிஸுடன் ஜோடியாக வந்தார். அதனையடுத்து இந்த விஷயம் மீண்டும் கோலிவுட்டில் பெரிய புயலை கிளப்பியது. அவர்கள் இரண்டு பேரும் வந்ததை பார்த்த ஆர்த்தியோ, எமோஷனலாக அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கைக்கு பிறகு பலரும் ஆர்த்திக்கு தங்களது ஆதரவை கொடுக்க ஆரம்பித்தார்கள்.

காண்டான ரவி மோகன்: இந்த விவகாரம் குறித்து மௌனம் காத்துவந்த ரவி; தற்போது அந்த மௌனத்தையும் கலைத்திருக்கிறார். அவர் இதுகுறித்து வெளியிட்டிருந்த அறிக்கையில், "கெனிஷாவை பொறுத்தவரை நீரில் மூழ்கும் ஒருவரை காப்பாற்றுபவர். என்னை உடைத்துக்கொண்டிருந்த எனது வாழ்க்கையிலிருந்து விலகி செல்வதற்கு எனக்கு தைரியம் மட்டும்தான் இருந்தது. எனது பணம், வாகன்ம், ஆவணங்கள், அடிப்படை கண்ணியம்கூட பறிக்கப்பட்டு வெறுங்காலுடன் நான் வீட்டை விட்டு வெளியேறியபோது கெனிஷா எனக்காக நின்றார்.

அவர்தான் எனக்கு ஒளி: நான் அவரை (ஆர்த்தி) பிரிந்த பிறகு எனது குழந்தைக்கு நடந்த விபத்தைக்கூட என்னிடம் சொல்லாமல் மறைத்துவிட்டார்கள். எனது அப்பா, அம்மாவுக்கு பணம் அனுப்பக்கூட நான் தடுக்கப்பட்டேன். மிரட்டி பணம் பறிப்பவர்களின் குடும்பத்தில் இருந்து துன்பப்பட்டதை என்னைவிடவும் அதிகம் யாராலும் புரிந்துகொள்ள முடியாது. எனது வாழ்க்கையில் ஒளியை கொண்டு வந்தவர் கெனிஷாதான். எனவே எனக்கு கொடுக்கும் மரியாதையை அவருக்கும் கொடுப்பீர்கள் என நம்புகிறேன்" என ஏகப்பட்ட விஷயங்களை பேசியிருந்தார்.

தயாரிப்பாளரின் பேட்டி: இந்நிலையில் பிரபல தயாரிப்பாளரான டி.ஆர்.ரமேஷ் ஃபில்மிபீட் தமிழுக்கு இந்த விவகாரம் குறித்து பிரத்யேக பேட்டியளித்திருக்கிறார். அவர் அளித்த பேட்டியில், "தாஸ் படத்தின் ஷூட்டிங் கல்பனா ஹவுஸில் நடந்தது. அது ஆர்த்தியின் அம்மாவுடைய வீடு. அதனை ஷூட்டிங் ஹவுஸாக கொடுத்துக்கொண்டிருந்தார்கள். அந்த ஷூட்டிங்கின்போது ரவிக்கும், ஆர்த்திக்கும் பழக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்தது. இந்தக் காதலுக்கு ரவியின் தந்தை எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் ரவி விடாப்பிடியாக இருந்து திருமணம் செய்துகொண்டார். ஆர்த்தியின் தாய் தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார். அப்போதிருந்துதான் ரவிக்கு டார்ச்சர் ஆரம்பித்தது. அவர்கள் ரவிக்கு சம்பளமும் தரவில்லை; சம்பாதிக்கவும் விடவில்லை.மருமகனை தன்வசப்படுத்தி குடும்பத்துக்கு அடிமையாக்கினார். அப்பா அம்மாவை விட்டும் வந்துவிட்டார். இது அவருக்கு பெரிய மன உளைச்சலை கொடுத்தது. அவர் வேறு என்ன செய்வார்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X