»   »  "வசூலுக்கு துபாய்க்குப் படையெடுக்கும் கோலிவுட்!

"வசூலுக்கு துபாய்க்குப் படையெடுக்கும் கோலிவுட்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
வளைகுடா தமிழர்களிடம் "நிதி வசூல்" செய்ய நடிகர் சங்கத் தலைவர் விஜயகாந்த் தலைமையில், தமிழ்த் திரையுலக கலைஞர்கள்மே 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் கலை நிகழ்ச்சி நடத்த துபாய் செல்லவுள்ளனர்.

தென்னிந்திய நடிகர் சங்கம், வங்கியில் வாங்கிய கடன் தொகையை அடைப்பதற்காக, சிங்கப்பூர், மலேசியா வாழ் தமிழர்களிடம்கடந்த 2002ம் ஆண்டு கலை நிகழ்ச்சி என்ற பெயரில் வசூல் வேட்டை நடத்தியது நடிகர் சங்கம்.

இந்த கலை நிகழ்ச்சிகளில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விக்ரம், விஜய், சரத்குமார் என முன்னணி நட்சத்திரங்கள் அனைவரும்கலந்து கொண்டனர். கலை நிகழ்ச்சிகளில் வசூலான தொகையை வைத்து கடனை அடைத்தனர்.

மிச்சமிருந்த பணத்தை வைத்து வேறு புதிய திட்டங்களையும் தீட்டினர். இப்போது நடிகர் சங்கத்திற்கு புதிதாக 5 மாடிக் கட்டடம்ஒன்றைக் கட்டத் திட்டமிட்டுள்ளனர். தற்போது நடிகர் சங்கம் உள்ள வளாகத்தில் சுவாமி சங்கரதாஸ் கலையரங்கம், பிரிவியூதியேட்டர் ஆகியவை உள்ளன.

அவற்றை மொத்தமாக இடித்து விட்டு புதிதாக 5 மாடிக் கட்டடம் ஒன்றை எழுப்பவுள்ளனர். இதற்குத் தேவைப்படும் நிதியைவழக்கம் போல வெளிநாடு வாழ் தமிழர்களிடம் திரட்ட முடிவு செய்துள்ளது நடிகர் சங்கம்.

கடந்த முறை சிங்கப்பூர், மலேசியாவில் வசூல் நடத்தி விட்டதால் இந்த முறை வளைகுடா வாழ் தமிழர்களை குறி வைத்து துபாய்,அபுதாபி ஆகிய ஊர்களில் கலை நிகழ்ச்சி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

மே 19ம் தேதி அபுதாபியிலும், 20ம் தேதி துபாயிலும் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். இதற்காக விஜயகாந்த்தலைமையில் 45 பேர் கொண்ட நடிகர், நடிகையர், கலைஞர்கள் குழு இரு நாடுகளுக்கும் செல்லவுள்ளனர்.

மே 18ம் தேதி சென்னையிலிருந்து இக்குழு கிளம்புகிறது. "வசூலை முடித்து விட்டு மே 21ம் தேதி சென்னை திரும்புகிறார்கள்.

இந்த கலை நிகழ்ச்சிகளில் ரஜினி காந்த், கமல்ஹாசன் ஆகியோர் கலந்து கொள்கிறார்களா என்பது உறுதியாகத் தெரியவில்லை.

தமிழ்ப் படங்களுக்கு தமிழில் பெயர் வைக்க மறுக்கும் கோலிவுட்காரர்களின் இந்த கலை நிகழ்ச்சிகளை வளை குடா வாழ்தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும் என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் ஏற்கனவே கோரிக்கை விடுத்துள்ளதுகுறிப்பிடத்தக்கது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil