விஜய் படத்துக்கு ரூ. 25 கோடி?
விஜய் நடித்துள்ள அழகிய தமிழ் மகன் படத்தின் தமிழக விநியோகம் மற்றும் உலகளாவிய உரிமையை ரூ. 25 கோடிக்கு பிரமிட் சாய்மீரா தியேட்டர் நிறுவனம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
விஜய், ஷ்ரியா, நமீதா ஆகியோரின் நடிப்பில், புதுமுக இயக்குநர் பரதனின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் அழகிய தமிழ் மகன். தரணியின் உதவியாளராக இருந்தவர்தான் பரதன். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.படப்பிடிப்பு செப்டம்பர் முதல் வாரத்திற்குள் முடிவடைந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தீபாவளிக்குப் படத்தைத் திரைக்குக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளனர்.
இந்த நிலையில் இப்படத்தின் தமிழக விநியோகம் மற்றும் உலகளாவிய விநியோக உரிமையை பிரமிட் சாய்மீரா தியேட்டர்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளதாம். அதுவும் ரூ. 25 கோடி கொடுத்து வாங்கியுள்ளதாக கோலிவுட்டில் பேச்சு எழுந்துள்ளது.
இது உண்மையா என்று சாய்மீரா நிறுவன செய்தித் தொடர்பாளரை தொடர்பு கொண்டு கேட்டபோது, விலை விவரத்தை விவரிக்க மறுத்து விட்டார். இருப்பினும் பட விநியோக உரிமை வாங்கப்பட்டது உண்மைதான் என்று உறுதி செய்தார்.
25 கோடி கொடுத்து இப்படம் வாங்கப்பட்டிருப்பது உண்மை என்றால், அதிக விலைக்கு போன முதல் விஜய் படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











