»   »  மகளுடன் மீண்டும் வரும் ராதா திருமணத்திற்குப் பின் அமெரிக்காவிலும் பின்னர் மும்பையிலுமான செட்டிலாகி விட்ட நடிகை ராதா மீண்டும் திரையுலகில் பிரவேசம் செய்யவுள்ளார். அதற்கு முன்னோட்டமாக தனது மகளுடன் சேர்ந்து சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடனம் ஆடவுள்ளார். பாரதிராஜா இயக்கத்தில் உருவான அலைகள் ஓய்வதில்லை படம் மூலம் ராதா திரையுலகில் அறிமுகமானார். அவருடன் சேர்ந்து அறிமுகமானவர் நடிகர் கார்த்திக். அலைகள் ஓய்வதில்லை படத்திற்குப் பிறகு இருவரும் வேகமாக முன்னேறினர். ராதா முன்னணி நாயகியானார். மறுபக்கம், ராதாவின் அக்கா அம்பிகாவும் முன்னணி நடிகையாகத் திகழ்ந்தனர். இரண்டு பேரும் ரஜினி, கமல், சத்யராஜ், விஜயகாந்த் என அந்த கால முன்னணி நாயகர்களுடன் சேர்ந்து நடித்தனர். புகழின் உச்சியில் இருந்தபோதே திடீரென திருமணம் செய்து கொண்டார் ராதா. தனது உறவினரான கேரளாவைச் சேர்ந்த மணி என்பவரைத் திருமணம் செய்து கொண்டு மும்பையில் குடியேறினார். அங்கு ராதாவின் கணவர் ஹோட்டல் நடத்தி வருகிறார். பின்னர் சில காலம் அமெரிக்காவில் வசித்த ராதா இப்போது மும்பைக்கே திரும்பிவிட்டார். ராதாவுக்கு இரண்டு மகள்கள் ஒரு மகன் உள்ளனர். திருமணமான பிறகு திரையுலகை சுத்தமாக மறந்து விட்ட ராதாவுக்கு திடீரென நடிப்பின் மீது மீண்டும் காதல் பிறந்துள்ளது. தான் மீண்டும் சினிமாவில் மறு பிரவேசம் செய்வதோடு, தனது மகளில் ஒருவரையும் சினிமாவில் இறக்கிவிடத் திட்டமிட்டுள்ளார். சினிமாவுக்குத் திரும்புவதற்காக குண்டாகிப் போன தனது உடலை கஷ்டப்பட்டு குறைத்துள்ளார் ராதா. 80 கிலோவாக இருந்த அவர் தற்போது 60 கிலோவாக குறைந்துள்ளார். இன்னும் கொஞ்சம் குறைக்கத் திட்டமிட்டுள்ளாராம். திருப்திகரமான அளவுக்கு உடல் எடை குறைந்து, தோற்றப் பொலிவு ஏற்பட்டிருப்பதால், திலையுலக மறு பிரவேசத்திற்குத் தயாராகி விட்டார். அதற்கு முன்னோட்டமாக மார்ச் 2ம் தேதி சிதம்பரம் நடராஜர் கோவிலில் பரத நாட்டியம் ஆடப் போகிறார். அவருடன் அவரது மகளும் சேர்ந்து ஆடுகிறார். இதையடுத்து பத்திரிக்கையாளர்களை சந்தித்து தான் மீண்டும் நடிக்கப் போவது குறித்து முறைப்படி அறிவிக்கவுள்ளாராம். ராதாவின் மகளையும் கார்த்திக்கின் மகனையும் ஒரு படத்தில் ஜோடியாக இறக்கிவிட்டு அறிமுகப்படுத்தவும் முயற்சிகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

மகளுடன் மீண்டும் வரும் ராதா திருமணத்திற்குப் பின் அமெரிக்காவிலும் பின்னர் மும்பையிலுமான செட்டிலாகி விட்ட நடிகை ராதா மீண்டும் திரையுலகில் பிரவேசம் செய்யவுள்ளார். அதற்கு முன்னோட்டமாக தனது மகளுடன் சேர்ந்து சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடனம் ஆடவுள்ளார். பாரதிராஜா இயக்கத்தில் உருவான அலைகள் ஓய்வதில்லை படம் மூலம் ராதா திரையுலகில் அறிமுகமானார். அவருடன் சேர்ந்து அறிமுகமானவர் நடிகர் கார்த்திக். அலைகள் ஓய்வதில்லை படத்திற்குப் பிறகு இருவரும் வேகமாக முன்னேறினர். ராதா முன்னணி நாயகியானார். மறுபக்கம், ராதாவின் அக்கா அம்பிகாவும் முன்னணி நடிகையாகத் திகழ்ந்தனர். இரண்டு பேரும் ரஜினி, கமல், சத்யராஜ், விஜயகாந்த் என அந்த கால முன்னணி நாயகர்களுடன் சேர்ந்து நடித்தனர். புகழின் உச்சியில் இருந்தபோதே திடீரென திருமணம் செய்து கொண்டார் ராதா. தனது உறவினரான கேரளாவைச் சேர்ந்த மணி என்பவரைத் திருமணம் செய்து கொண்டு மும்பையில் குடியேறினார். அங்கு ராதாவின் கணவர் ஹோட்டல் நடத்தி வருகிறார். பின்னர் சில காலம் அமெரிக்காவில் வசித்த ராதா இப்போது மும்பைக்கே திரும்பிவிட்டார். ராதாவுக்கு இரண்டு மகள்கள் ஒரு மகன் உள்ளனர். திருமணமான பிறகு திரையுலகை சுத்தமாக மறந்து விட்ட ராதாவுக்கு திடீரென நடிப்பின் மீது மீண்டும் காதல் பிறந்துள்ளது. தான் மீண்டும் சினிமாவில் மறு பிரவேசம் செய்வதோடு, தனது மகளில் ஒருவரையும் சினிமாவில் இறக்கிவிடத் திட்டமிட்டுள்ளார். சினிமாவுக்குத் திரும்புவதற்காக குண்டாகிப் போன தனது உடலை கஷ்டப்பட்டு குறைத்துள்ளார் ராதா. 80 கிலோவாக இருந்த அவர் தற்போது 60 கிலோவாக குறைந்துள்ளார். இன்னும் கொஞ்சம் குறைக்கத் திட்டமிட்டுள்ளாராம். திருப்திகரமான அளவுக்கு உடல் எடை குறைந்து, தோற்றப் பொலிவு ஏற்பட்டிருப்பதால், திலையுலக மறு பிரவேசத்திற்குத் தயாராகி விட்டார். அதற்கு முன்னோட்டமாக மார்ச் 2ம் தேதி சிதம்பரம் நடராஜர் கோவிலில் பரத நாட்டியம் ஆடப் போகிறார். அவருடன் அவரது மகளும் சேர்ந்து ஆடுகிறார். இதையடுத்து பத்திரிக்கையாளர்களை சந்தித்து தான் மீண்டும் நடிக்கப் போவது குறித்து முறைப்படி அறிவிக்கவுள்ளாராம். ராதாவின் மகளையும் கார்த்திக்கின் மகனையும் ஒரு படத்தில் ஜோடியாக இறக்கிவிட்டு அறிமுகப்படுத்தவும் முயற்சிகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Subscribe to Oneindia Tamil
திருமணத்திற்குப் பின் அமெரிக்காவிலும் பின்னர் மும்பையிலுமான செட்டிலாகி விட்ட நடிகை ராதா மீண்டும் திரையுலகில் பிரவேசம் செய்யவுள்ளார். அதற்கு முன்னோட்டமாக தனது மகளுடன் சேர்ந்து சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடனம் ஆடவுள்ளார்.

பாரதிராஜா இயக்கத்தில் உருவான அலைகள் ஓய்வதில்லை படம் மூலம் ராதா திரையுலகில் அறிமுகமானார். அவருடன் சேர்ந்து அறிமுகமானவர் நடிகர் கார்த்திக். அலைகள் ஓய்வதில்லை படத்திற்குப் பிறகு இருவரும் வேகமாக முன்னேறினர்.

ராதா முன்னணி நாயகியானார். மறுபக்கம், ராதாவின் அக்கா அம்பிகாவும் முன்னணி நடிகையாகத் திகழ்ந்தனர். இரண்டு பேரும் ரஜினி, கமல், சத்யராஜ், விஜயகாந்த் என அந்த கால முன்னணி நாயகர்களுடன் சேர்ந்து நடித்தனர்.

புகழின் உச்சியில் இருந்தபோதே திடீரென திருமணம் செய்து கொண்டார் ராதா. தனது உறவினரான கேரளாவைச் சேர்ந்த மணி என்பவரைத் திருமணம் செய்து கொண்டு மும்பையில் குடியேறினார்.

அங்கு ராதாவின் கணவர் ஹோட்டல் நடத்தி வருகிறார். பின்னர் சில காலம் அமெரிக்காவில் வசித்த ராதா இப்போது மும்பைக்கே திரும்பிவிட்டார்.

ராதாவுக்கு இரண்டு மகள்கள் ஒரு மகன் உள்ளனர். திருமணமான பிறகு திரையுலகை சுத்தமாக மறந்து விட்ட ராதாவுக்கு திடீரென நடிப்பின் மீது மீண்டும் காதல் பிறந்துள்ளது.

தான் மீண்டும் சினிமாவில் மறு பிரவேசம் செய்வதோடு, தனது மகளில் ஒருவரையும் சினிமாவில் இறக்கிவிடத் திட்டமிட்டுள்ளார்.

சினிமாவுக்குத் திரும்புவதற்காக குண்டாகிப் போன தனது உடலை கஷ்டப்பட்டு குறைத்துள்ளார் ராதா. 80 கிலோவாக இருந்த அவர் தற்போது 60 கிலோவாக குறைந்துள்ளார். இன்னும் கொஞ்சம் குறைக்கத் திட்டமிட்டுள்ளாராம்.

திருப்திகரமான அளவுக்கு உடல் எடை குறைந்து, தோற்றப் பொலிவு ஏற்பட்டிருப்பதால், திலையுலக மறு பிரவேசத்திற்குத் தயாராகி விட்டார். அதற்கு முன்னோட்டமாக மார்ச் 2ம் தேதி சிதம்பரம் நடராஜர் கோவிலில் பரத நாட்டியம் ஆடப் போகிறார். அவருடன் அவரது மகளும் சேர்ந்து ஆடுகிறார்.

இதையடுத்து பத்திரிக்கையாளர்களை சந்தித்து தான் மீண்டும் நடிக்கப் போவது குறித்து முறைப்படி அறிவிக்கவுள்ளாராம்.

ராதாவின் மகளையும் கார்த்திக்கின் மகனையும் ஒரு படத்தில் ஜோடியாக இறக்கிவிட்டு அறிமுகப்படுத்தவும் முயற்சிகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil