»   »  சரத்-ராதிகா கட்சியில் ராதாரவி?

சரத்-ராதிகா கட்சியில் ராதாரவி?

Subscribe to Oneindia Tamil

வாழ்க்கை முழுவதும் சரத்குமாருக்கு நானும், எனக்கு அவரும் துணை இருப்போம். எந்தச் சோதனைகள்வந்தாலும் இருவரும் இணைந்து அதை சந்திப்போம் என்று நடிகை ராதிகா கூறியுள்ளார்.

நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் 100 படங்களில் நடித்து முடித்துள்ளதையொட்டி அவருக்கு சென்னைதேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் அரிமா சங்கம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.

இதில் சரத்குமார், மனைவி ராதிகா, மைத்துனரும், நடிகர் சங்க பொதுச் செயலாளர் ராதாரவியும் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் ராதிகா படு உருக்கமாக பேசினார்.

எனது கணவர் நல்ல நடிகர் என்பது உங்களுக்குத் தெரியும். நல்ல மனிதர் என்று எனக்குத் தெரியும். எனதுகணவரை நானே பாராட்டிப் பேசுவது சரியாக இருக்காது. உடன் நடித்த நடிகர், நடிகையர், ஆதரவு கொடுத்தரசிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள்தான் அவரைப் பாராட்ட வேண்டும்.

அவரை முதன் முதலாக நான் மும்பை விமான நிலையத்தில்தான் சந்தித்தேன். ஒரு நடிகரின் கால்ஷீட் கேட்டுஅவர் மும்பைக்கு வந்திருந்தார். அப்போது அவரிடம் நீங்களே அழகாகத்தானே இருக்கிறீர்கள், நீங்களேநடிக்கலாமே என்றேன். நான் சொன்னபடியே நடிகராகி விட்டார். பிறகு எனக்கு நண்பரானார், இப்போது கணவர்.

மனித நேயம் மிக்கவர் சரத். யாருக்கும் உதவி செய்யத் தயங்க மாட்டார். ஆபத்து என்றால் ஓடி வந்து நிற்பார்.சினிமாவில் மட்டும் அவர் நாட்டாமை அல்ல, நிஜத்திலும் அப்படித்தான். வேட்டையாடு விளையாடு படம் சரத்உதவியில்லாமல் வந்திருக்க முடியாது என்று சமீபத்தில் கமல்ஹாசன் கூட சொல்லியிருக்கிறார்.

இப்போது சொல்கிறேன். கடைசி வரை அவருக்கு நானும், எனக்கு அவருமாக, எந்தச் சோதனை வந்தாலும் அதைசந்தித்து, சமாளித்து துணையாக இருப்போம். கடைசி வரை அவர் மிகப் பெரிய நடிகராக இருக்க வேண்டும்.அதற்கு ரசிகர்கள் ஆதரவாக இருக்க வேண்டும்.

காமராஜருக்கு மணி மண்டபம் கட்ட வேண்டும் என்பது அவரது ஆசை மட்டுமல்ல லட்சியமும் கூட. அந்தக்கனவு இப்போது நனவாகப் போகிறது. தமிழர்கள் பெருமைப்படுகிற அளவுக்கு அந்த மணிமண்டபம் சிறப்பாகஅமையும் என்றார் ராதிகா.

ராதாரவி பேசுகையில், எங்களது குடும்பத்தில் அனைவருமே வில்லன்கள். எனது தங்கை ராதிகா மட்டும்தான்ஹீரோயினாகி விட்டார். சரத்குமார் புகழை நாடாதவர், பணத்தை நாடாதவர். அன்பை மட்டுமே நாடுபவர்.வாழ்க்கையில் மறு பிறவி எடுத்தவர் என்றார்.

நன்றி தெரிவித்து சரத்குமார் பேசுகையில், ரசிகர்களும், பொதுமக்களும் என்னைப் பாராட்டினால் போதும் என்றுநினைப்பவன் நான். 100 படங்களில் நடிப்பது பெரிய விஷயமா என்றால் ஆம் என்று தான் சொல்வேன். நான்100 தான், எனது மனைவி ராதிகா 350 படங்களில் நடித்திருக்கிறார். எனவே அவர் எனக்கு சினிமாவில் சீனியர்.

கடவுள் கொடுத்த வரம்தான் அகில உலக ரசிகர்களுக்கும் நாங்கள் பொழுதுபோக்காக இருக்கிறோம். இதுகிடைக்கக் காரணம் ரசிகர்கள்.

சுயநலம் இல்லாத தொண்டுள்ளம் வர வேண்டும். ஜாதி மத பேதங்கள் போக வேண்டும். நல்ல சமுதாயம்அமைய வேண்டும். கடைசியில் யாரும் இங்கிருந்து எதையும் எடுத்துச் செல்லப் போவதில்லை. அனைவரும்சேர்ந்து நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம் என்றார் சரத்.

விழாவில் சரத்குமாருக்கும், ராதாரவிக்கும் ஆளுயர மாலை அணிவித்து தலையில் கிரீடமும் சூட்டப்பட்டது.கிட்டத்தட்ட சரத்தின் தளபதி போல பாவிக்கப்பட்டார் ராதாரவி.

அதிமுகவிலிருந்து வெளியேறி விட்ட சரத்குமாருக்கு நடந்த பாராட்டு விழாவில் ராதாரவி அவரைப் புகழ்ந்துபேசியதும், அவருக்கு கிரீடம் சூட்டப்பட்டதும், ராதாரவி மீதான அதிமுகவினரின் சந்தேகத்தை மேலும்வலுப்படுத்துவதாக உள்ளது. ஏற்கனவே சமீபத்தில் முதல்வர் கருணாநிதிக்குப் பொன்னாடை போர்த்திவணங்கினார் ராதாரவி என்பது நினைவிருக்கலாம்.

தனிக் கட்சி தொடங்கவுள்ள சரத்குமாருடன் இணைவார் ராதாரவி என்கிறார்கள்.

விஜய்காந்த்துக்கு சினிமா-அரசியலில் எல்லாமே மச்சான் சுதீஷ் தான். அதே மாதிரி சரத்துக்கு ராதாரவியா?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil