»   »  ஆபாச சிடி ராதிகா பாய்ச்சல்

ஆபாச சிடி ராதிகா பாய்ச்சல்

Subscribe to Oneindia Tamil

தன் மீது வேண்டும் என்றே விபச்சார வழக்குப் பதிவு செய்து போலீஸார் அலையவிட்டு விட்டதாக டிவி நடிகை ராதிகா குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை சாலிகிராமத்தில் சமீபத்தில் வீட்டில் விபச்சாரம் செய்து கொண்டிருந்ததாகடிவி நடிகை ராதிகாவை போலீஸார் கைது செய்தனர். அவருடைய உறவினர் போஸ்,கணவர் நசீர், தம்பி உள்ளிட்டோரும் வளைத்துப் பிடிக்கப்பட்டனர்.

போலீஸாருக்கு வந்த ஒரு தபால் புகாரில் ராதிகா, நடிகை பாபிலோனா உள்ளிட்டோர்ஆபாசமாக நடித்திருந்த சிடி இணைக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில்தான்ரெய்டு நடத்தி ராதிகாவை கைது செய்தது போலீஸ்.

கைது செய்யப்பட்டு, கோர்ட்டில் நிறுத்தப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டராதிகா இப்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார். வந்த வேகத்தில் போலீஸார் மீதுபாய்ந்துள்ளார் ராதிகா.

செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், கடந்த 22ம் தேதி சாலிகிராமத்தில் உள்ளஎனது வீட்டில் உட்கார்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்தேன். எனது கணவர் நசீர்அப்போது வீட்டில் இல்லை. அப்பேதுதூ நான்கு பேர் அங்கு வந்தனர்.

சிட்டி வங்கி கிரடிட் கார்டு தொடர்பாக யாருக்காவது நசீர் உத்தரவாதம் தந்துள்ளாராஎன்று கேட்டனர். உடனே நான் எனது கணவருடன் செல்போன் மூலம் பேசிகேட்டபோது, அப்படியெல்லாம் இல்லை என்று கூறினார். இதையடுத்து நான்குபேரும் போய் விட்டனர்.

பின்னர் அந்த நான்கு பேரும் மீண்டும் வந்தனர். அவர்களில் ஒருவர் என்னிடம் வந்துஉனது உறவினர் போஸ் எங்கே என்றார். நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து ஆபாசப்படத்தில் நடித்துள்ளீர்களாமே, விசாரிக்க வேண்டும், காவல் நிலையத்துக்கு வா என்றுஅழைத்தனர். பிறகுதான் தெ>ந்தது, நான்கு பேரும் போலீஸார் என்று.

இதையடுத்து எனக்குச் சொந்தமான சுமோ காரில் தம்பியுடன் சென்றேன். வீட்டில்நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எனது இன்னொரு மாருதி காரை போலீஸார் காவல்நிலையத்திற்கு எடுத்து வந்தனர். பிறகு நகைகளையும் பறித்துக் கொண்டனர். எனதுசெல்போனையும் எடுத்துக் கொண்டனர்.

இப்படி மாலை 5 மணி வரை என்னையும், எனது தம்பியையும் அலைக்கழித்தஅவர்கள் அதன் பிறகு கைது செய்வதாக அறிவித்தனர். பின்னர் புழல் சிறையில்கொண்டு போய் அடைத்தனர்.

போலீஸார் என்னை வேண்டும் என்றே அலைக்கழித்து விட்டனர். இதனால் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் நான் அவஸ்தைப்பட்டு விட்டேன். என் மீதான வழக்குஜோடனையானது, பொய்யானது என்றார் ராதிகா.

ஆனால் போலீஸ் தரப்பில் ராதிகாவை ஒரு விபச்சாரப் பெண்ணாகத்தான்கூறுகிறார்கள். அவர் டிவி நடிகை என்ற போர்வையில், கடந்த 4 வருடங்களாகவிபச்சாரம்தான் செய்து வந்துள்ளார். சேகர் என்பவர் கொடுத்த புகாரின் பேரில்தான்ராதிகாவைக் கைது செய்துள்ளோம்.

போஸ் என்ற புரோக்கருடன் ராதிகா சேர்ந்து நடித்த ஆபாசப் பட சிடிக்கள் எங்களிடம்சிக்கியுள்ளன. அதுவே ராதிகா என்பதை உறுதி செய்வதற்குப்போதுமானது. இவரதுவிபச்சாரத் தொழிலுக்கு உடந்தையாக இருந்த கணவர் நசீர், தம்பி ஆகியோரும் கைதுசெய்யப்பட்டனர் என்று போலீஸ் தரப்பு தெளிவாகவே கூறுகிறது.

Read more about: radhika attacks police

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil