»   »  குட்டி ராதிகா வீட்டில் ரெய்டு!

குட்டி ராதிகா வீட்டில் ரெய்டு!

Subscribe to Oneindia Tamil

பிரபல கன்னட நடிகை குட்டி ராதிகா வீட்டில் வருமான வரி அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

இயற்கை படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க வந்தவர் குட்டி ராதிகா. பெங்களூரைச் சேர்ந்த குட்டி ராதிகா தமிழில் இயற்கை, வர்ணஜாலம்உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

கன்னடத்தில் நிறையப் படங்களில் நடித்துள்ள குட்டி ராதிகா தற்போது அங்கு முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்குகிறார்.

பெங்களூர் பனசங்கரி 3வது ஸ்டேஜ், 5வது கிராஸில் குட்டி ராதிகாவின் வீடு உள்ளது. இவர் மீது வருமான வரி ஏய்ப்புப் புகார் வந்தது.இதையடுத்து நேற்று வருமான வரி அதிகாரிகள், குட்டி ராதிகா வீட்டுக்கு வந்து அதிரடி சோதனையில் இறங்கினர்.

கிட்டத்தட்ட 5 மணி நேரத்திற்கு சோதனை நடந்தது. இந்த சோதனையின்போது பல சொத்து ஆவணங்கள் சிக்கின. டாலர்ஸ் காலனி பகுதியில்குட்டி ராதிகாவுக்கு ரூ. 13 கோடி மதிப்புள்ள பங்களா ஒன்று இருப்பதும் தெரிய வந்தது. இந்த பங்களாவை எப்படி வாங்கினீர்கள், பணம் எப்படிவந்தது என்பது குறித்து வருமான வரி அதிகாரிகள் குட்டி ராதிகாவிடம் துருவித் துருவி விசாரணை நடத்தினர்.

இத்தனைக்கும் குட்டி ராதிகாவின் சம்பளம் ஒரு படத்துக்கு ரூ. 5 லட்சத்தைக் கூட தாண்டாது என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தம் நடித்துள்ளபடங்களும் 25க்குள் தான். இருந்தாலும் கோடிக்கணக்கில் சொத்து சேர்த்துள்ளார்.

இந்தச் சோதனையில் கைப்பற்றப்பட்டவை குறித்த தகவல்களை வருமான வரித்துறை அதிகாரிகள் வெளியிடவில்லை.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil