»   »  ராதிகாவுக்கு எதிராக போராட்டம்

ராதிகாவுக்கு எதிராக போராட்டம்

Subscribe to Oneindia Tamil

கோக் ஆபத்தில்லாத குளிர்பானம் என்று கூறும் விளம்பரத்தில் நடித்ததற்காக நடிகைராதிகாவைக் கண்டித்து சென்னையில் உள்ள அவருக்குச் சொந்தமான ராடான்அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.

பூச்சிக் கொல்லி கலக்கப்பட்டிருப்பதாக கோக் மற்றும் பெப்சி குளிர்பானங்கள்சர்ச்சையில் சிக்கியுள்ளன. இந் நிலையில் கோக் நிறுவனம் சார்பில் ஒரு விளம்பரம்தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வருகிறது.

அதில் நடிகை ராதிகா, கோக் குளிர்பானம் தயாரிக்கும் நிறுவனத்திற்குச் சென்று சுற்றிப்பார்ப்பது போலவும், அதைக் குடித்துப் பார்த்து விட்டு, இது ஆபத்தில்லாதகுளிர்பானம், நானும், எனது குடும்பத்தினரும் தோணும் போதெல்லாம் கோக்குடிப்போம் என்று கூறுவதாகவும் காட்சிகள் வருகின்றன.

இந்த விளம்பரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய ஜனநாயக தொழிலாளர்முன்னேற்ற சங்கம் என்ற அமைப்பைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் 50 பேர் தி.நகர்பால் அப்பாசாமி தெருவில் உள்ள ராதிகாவின் ராடான் நிறுவன அலுவலகம் முன்புஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், கோக்கில் நச்சுத்தன்மை இல்லை. ான்சென்று நேரில் பரிசோதித்து சந்தேகங்களை தெளிவாக்கிக் கொண்டதைப் போலநீங்களும் சென்று விளக்கம் பெறலாம் என விளம்பரத்தில் ராதிகா சொல்கிறார்.

ஆனால் எங்களது அமைப்பைச் சேர்ந்தவர்களோ, அல்லது தொண்டு நிறுவனங்களைச்சேர்ந்தவர்களோ அங்கு சென்றால் உள்ளே விட அனுமதி மறுக்கிறார்கள்.

எனவே நடிகை ராதிகா செய்வது தவறான பிரசாரம். இதை உடனடியாக தடை செய்யவேண்டும். இப்படிப்பட்ட விளம்பரத்தில் ராதிகா நடித்தது தவறு என்றனர்.

ஒரு மணி நேரம் நடந்த ஆர்ப்பாட்டத்திற்குப் பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.

Read more about: protest against radhika
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil