»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

என் புருஷன் எதிர்வீட்டுப் பொண்ணு என்று அஜால், குஜால் படம் தயாராகிக் கொண்டிருக்கிறது. தலைப்பைப் பார்த்தாலே கதையும் அதில் காட்டப்படவுள்ள சமாச்சாரங்களும் உங்களுக்குப் புரிந்துவிடும்.

கவர்ச்சிக்குப் பெயர் போன அபிநயஸ்ரீயும் ராதிகா செளத்ரியும் நடிக்கும் இந்தப் படத்தில் ஹீரோ பாண்டியராஜன்.

ஹீரோயினாக, சங்கவி நடிக்கிறார். இவருக்கும் ராதிகா செளத்ரிக்கும் நீண்ட முயற்சிக்குப் பின் கிடைத்திருக்கும் சான்ஸ் இது என்பதால் இருவரும் புகுந்து விளையாடி வருகின்றனராம்.

ஒல்லியானால் தமிழ் சினிமாவில் மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் என்று யாரோ சொல்லியதை நம்பி ஸ்லிம் ஆன சங்கவி சுத்தமாக ஒதுக்கப்பட்டார். இதையடுத்து உடம்பை மீண்டும் தேற்றிக் கொண்டு அவர் களமிறங்கியுள்ள படம் இது. (இது தவிர கலாட்டா கணபதி என்ற படத்திலும் பாண்டியராஜனுடன் கலக்கி வருகிறார்)

ராதிகா செளத்ரியைப் பொறுத்தவரை ஒதுங்கி கன்னடப் படங்களில் கிடைத்த காசுக்கு கிடைத்த ஹீரோக்களுடன் கவர்ச்சி ரோல்களில் மிட்-நைட் மசாலா ரேஞ்ச் படங்ளில் நடித்துக் கொண்டிருந்தார். அவருக்கும் நெடு நாட்களுக்குப் பின் தமிழில் நடிக்க கிடைத்துள்ள வாய்ப்பு இது.

படத்தில் அபிநயஸ்ரீ தனது வழக்கமான கவர்ச்சியாட்டம் போட்டாலும், போட்டி என்னவோ ராதிகாவுக்கும் சங்கவிக்கும்தானாம்.

மூவரும் மாபெரும் சைஸ்களில் இருந்தாலும் குட்டை பாவாடை-சட்டை, பாவாடை-தாவணியில் முடிந்தவரை எக்போஸ் செய்யும் காஸ்ட்யூம்களில் நடித்துக் கொண்டிருக்கின்றனர். படுவேகமாக நடந்து வருகிறது சூட்டிங்.

Please Wait while comments are loading...