twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    டான்ஸ் மாஸ்டரின் டான்

    By Staff
    |

    டான்ஸ் மாஸ்டர் கம் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் ஐதராபாத்தில் டேரா போட்டுள்ளார்

    தெலுங்கின் முன்னணி நடிகரான நாகார்ஜூன் நடிக்கும் டான் படத்தை இயக்கி வருகிறார். இவருடன் அனுஷ்கா ஜோடி சேர்ந்து நடிக்கிறார்.

    லாரன்ஸ் மேலும் விஷப்பரீட்சையிலும் இறங்கியுள்ளாராம்.

    தான் இயக்கும் டான் படத்தின் இசையமைக்கும் பொறுப்பையும் ஏற்றுள்ளார். அது மட்டும் கிடையாதாம். ஹீரோவாக நடிக்கும் நாகார்ஜூனின் தம்பியாகவும் நடிப்பில் பிளக்கவும் உள்ளாராம்.

    அவரிடம் நடிகர் விஜய்யை வைத்து படம் டைரக்ட் செய்யப் போவதாக பேச்சு அடிபட்டதே என்று கேட்டதற்கு,

    அது என்னமோ உண்மைதான். ஆனால் இன்னும் நான் விஜய்யிடம் கதை சொல்லவில்லை. கதையை சொல்லிவிட்டால் போதும். நான் இயக்கும் டான் படம் வெளிவந்த பிறகு, விஜய்யிடம் அதைப்பற்றி பேசுவேன் என்றார்.

    நானும், விஜய்யும் சேரும் படம் இதுவரை இல்லாத அளவு பிரம்மாண்டமாக இருக்கும் எனவும், தமிழ்த் திரையுலகை திரும்பிப் பார்க்க வைக்கும் என்கிறார்.

    பார்த்துண்ணே...

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X