ஸ்பெஷல்ஸ்
போதையின் பிடியில் சிக்கித் தவித்து வரும் ரகுவரன் மீண்டும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
குடி மற்றும் போதை ஊசிக்கு அடிமையாகிவிட்ட ரகுவரனின் கொடுமைகளில் இருந்து தப்ப அவரது மனைவி நடிரை ரோகிணி தனதுகுழந்தையுடன் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார்.
இதையடுத்து குழந்தையை மீட்கக் கோரி மகளிர் காவல் நிலையத்தில் போய் தகராறு செய்தார் ரகுவரன். ரகுவரனும் ரோகிணியும் ஒருவரைஒருவர் குற்றம் சாட்டி நிருபர்களிடம் பேசினர்.
இந் நிலையில் போதை மற்றும் மனைவியின் பிரிவால் உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டுவிட்ட ரகுவரன் தனியார் மருத்துவமனையில்சேர்க்கப்பட்டுள்ளார். போதையின் பிடியில் அவர் சிக்கி மீள முடியாத நிலை உருவாகும்போதெல்லாம் மருத்துவனையில் சேர்க்கப்படுவதுவழக்கம் தான்.
இருப்பினும் இம்முறை அவரது உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
ரோகிணியை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு ரோகிணியில் நெருங்கிய தோழியான நடிகை ரேவதியடம் ரகுவரன் கோரியுள்ளார்.இப்போது மும்பையில் உள்ள ரேவதி சென்னை திரும்பி இருவரிடமும் பேசுவார் என்று தெரிகிறது.


Click it and Unblock the Notifications











