twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரஹ்மானுக்கு கிடைக்குமா ஆஸ்கர்?

    By Staff
    |

    ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆஸ்கர் விருது கிடைக்கக் கூடிய வாய்ப்புகள் உருவாகியுள்ளன. அவரது இசையில்உருவான 3 பாடல்கள் ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

    திரையுலகின் மிக உயரிய விருதாக ஆஸ்கர் விருது கருதப்படுகிறது. இருப்பினும் வட அமெரிக்கா மற்றும்இங்கிலாந்தில் திரையிடப்படும் ஆங்கிலப் படங்களுக்கே இந்த விருதுகள் பொதுவாக வழங்கப்படுகிறது.இதுதவிர வெளிநாட்டுப் படங்களுக்கென தனியாக ஒரு பிரிவை வைத்துள்ளனர்.

    ஆங்கிலப் படங்களுக்கான விருதுதான் என்றாலும் கூட உலகெங்கும் உள்ள திரையுலகினர் மத்தியில் ஆஸ்கர்விருதுக் கனவுகள் எப்போதும் கூடவே இருந்து கொண்டிருக்கும்.

    இந் நிலையில் இந்த ஆண்டுக்கான சிறந்த இசையமைப்பாளர் விருதுக்கு ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் பலமாகஅடிபடத் தொடங்கியுள்ளது. ஒரிஜினல் பாடல் பிரிவில் ரஹ்மான் இசையில் உருவான 3 பாடல்கள்பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

    வாட்டர் படத்தில் இடம்பெற்ற சன் சன் பாடல், ரங் தே பசந்தி படத்தில் இடம் பெற்ற கல்பாலி, லுக்கா சுபி ஆகியஇரு பாடல்களும் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

    இப்பிரிவில் மொத்தம் 56 பாடல்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. அதில் ஒரே இசையமைப்பாளரின் 3 பாடல்கள்இடம் பெற்றுள்ளது ரஹ்மானுடையது மட்டுமே. மேலும், ஆஸ்கர் வரலாற்றில் ஒரே இசையமைப்பாளரின் அதிகபாடல்கள் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளதும் இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.

    ரஹ்மான் விருதுக்குப் பக்கத்த்தில் வந்து விட்டார். விருதைத் தட்டிச் செல்வாரா என்பதை பொறுத்திருந்துபார்ப்போம்.

      Read more about: will arrahman win oscar
      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X