twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'மைக்கேல் ஜாக்சனின் அமைதி கீதம்'- ரஹ்மான் பாடினார்

    By Staff
    |

    We are the World
    ஹெய்தி பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிதி திரட்டும் முகமாக, மைக்கேல் ஜாக்சனின் புகழ் பெற்ற 'We Are The World' பாடலைக் கொண்டு ஒரு இசை ஆல்பம் உருவாகிறது.

    இதில் உலகப் புகழ் பெற்ற பாடகர்களான பார்பரா ஸ்டிரைசான்ட், லியோனல் ரிச்சி, செலின் டயான், கென்யே வெஸ்ட் உள்ளிட்ட 80 பாடகர்கள் கலந்து கொண்டு பாடுகின்றனர். இவர்களில் இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மானும் ஒருவராக இடம் பெற்றுள்ளார்.

    கிராமி விருது விழாவில் பங்கேற்ற 2 விருதுகளை அள்ளிய கையோடு ரஹ்மான் ஒலிப்பதிவுக் கூடத்திற்கு விரைந்தார். அங்கு நடந்த ஒலி மற்றும் ஒளிப்பதில் கலந்து கொண்டு பிற பாடகர்களோடு இணைந்து ரஹ்மானும் இப்பாடலைப் பாடினார்.

    இந்தத் தகவலை ரஹ்மான் ட்வீட்டர் மூலம் தனது ரசிகர்களுக்குத் தெரிவித்துள்ளார்.

    இந்த ஆல்பத்தில் பாட வருமாறு பழம்பெரும் தயாரிப்பாளர் குவின்சி ஜோன்ஸ் மற்றும் பாடகர் லியோனல் ரிச்சி ஆகியோர் ரஹ்மானுக்கு அழைப்பு விடுத்தனர். அதை ஏற்றுப் பாடிக் கொடுத்துள்ளார் ரஹ்மான்.

    "We Are the World" பாடலின் பின்னணி..

    1985ம் ஆண்டு இந்தப் பாடல் பதிவு செய்யப்பட்டது. பஞ்சத்தால் பரிதவித்து வந்த ஆப்பிரிக்க மக்களுக்கு நிதி திரட்டுவதற்காக இந்தப் பாடலை உருவாக்கினார் மைக்கேல் ஜாக்சன். அவருடன் இணைந்து இந்தப் பாடலை எழுதியவர் லியோனல் ரிச்சி. இந்தப் பாடலை ஜாக்சனும், ரிச்சியும் ஒரே இரவில் எழுதி முடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    அவர்களுடன் இணைந்து இதை தயாரித்தவர் குவின்சி ஜோன்ஸ் மற்றும் மைக்கேல் ஓமரிடன்.

    வி ஆர் தி வேர்ல்ட் என்ற பெயரில் உருவான ஆல்பத்தில் இடம் பெற்ற பாடல்களில் ஒன்றாகத்தான் இது முன்பு இருந்தது. பின்னர் இந்தப் பாடலை மட்டும் தனியாக எடுத்து ஆல்பமாக்கி வெளியிட்டனர். அது உலகெங்கும் பெரும் வரவேற்பைப் பெற்றது. விற்பனையிலும் பெரும் சாதனை படைத்தது.

    அக்காலத்தில் புகழ் பெற்றிருந்த பல்வேறு பாடகர்கள் இந்தப் பாடலுக்காக குரல்கள் மூலம் இணைந்தது விசேஷமானது.

    தொண்டு நிதி திரட்டுவதற்காக உருவாக்கப்பட்ட பாடல் என்பதால் இதற்கு மைக்கேல் ஜாக்சனின் அமைதி கீதம் என்றும் பெயர் உருவானது.

    தற்போது ஹெய்தி பூகம்ப நி்வாரணத்திற்கு நிதி திரட்டும் வகையில் இந்தப் பாடலை மீண்டும் ஒலிப்பதிவு செய்துள்ளனர். அதில்தான் பல்வேறு புகழ் பெற்ற பாடகர்களுடன் ரஹ்மானும் இணைந்து பாடியுள்ளார்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X