»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

வைரமுத்துவும், ஏ.ஆர்.ரஹ்மானும் மீண்டும் இணைய மாட்டார்கள் என்று கூறப்பட்டது. ஆனால், இருவரும் இணைந்துதான் நியூ படத்தின் பாடல்களைஉருவாக்கப் போகிறார்களாம்.

பாபா படத்தில் சில பாடல்கள் தொடர்பாக வைரமுத்துவுக்கும், ரஹ்மானுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

லண்டனில் உட்கார்ந்து கொண்டு டெலிபோனில் டியூன் சொல்லி பாடல் எழுதச் சொன்ன ரஹ்மான் மீதுகாட்டமானார் வைரமுத்து. இதை ரஜினியிடமும் கூறினார். ஆனால், சூப்பர் ஸ்டார் தலையிட்டு இருவரையும்அமைதிப்படுத்தினார்.

அதைத் தொடர்ந்து பேட்டியளித்த ரஹ்மான், இனிமேல் என்னுடன் வேலை செய்ய வைரமுத்துவுக்கு பொறுமைஇருக்காது. அவரை மட்டும் தான் நான் யூஸ் செய்யனும்னு நினைக்கிறார்.

மத்த கவிஞர்களை நான் பயன்படுத்தக்கூடாதுன்னு நினைக்கிறார் வைரமுத்து. அதை என்னால ஏத்துக்க முடியாது என்றார்.

மேலும் தனது கடுப்பை நேரடியாகவே காட்டிய ரஹ்மான், பாபா படத்துக்கு வைரமுத்து எழுதிய ஒரு பாடலைநிராகரித்தார்.

இதனால், இருவரும் இனிமேல் சேர வாய்ப்பில்லை என்ற நிலை உருவானது.

ஆனால் இயக்குனர் சூர்யாவின் முயற்சியால் இருவரும் இணைந்து நியூ படத்திற்காக பாடல்களைப் புனையப்போகிறார்களாம்.

இவர்கள் இணைவதால் லாபம் என்னவோ தமிழுக்குத்தான்!

அப்படியே ராஜாவும் வைரமுத்துவும் இணைந்தால்....

Please Wait while comments are loading...