“ராஜா ராஜா சோழன் நான் “… இளம் தலைமுறையினர் பார்வையில் இளையராஜா !

சென்னை : இசைஞானி இளையாராஜா இசை என்றாலே, அது பல தலைமுறைகளை தாண்டி இன்றளவும் ரசிகர்களை ஈர்ப்பதாகவே உள்ளது. கடந்த 1975-ம் ஆண்டு முதல் திரையுலகில் இசையமைக்க துவங்கிய இளையராஜா, கிட்டத்தட்ட 50 ஆண்டுகளை நெருங்கியுள்ளார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என கிட்டத்தட்ட 9 மொழிகளில், 1400-க்கும் மேற்பட்ட படங்களில் இசையமைத்துள்ளார்.

Recommended Video

Ilayaraja Unknown Facts |Ilayaraja பற்றி அறியாத சுவாரஸ்ய தகவல்கள் | #Celebrity |Filmibeat Tamil

மூன்று தலைமுறைகளை கடந்து இசைஞானி இளையராஜா இசையில் ராஜ்ஜியம் செய்து வருகிறார்.

இசையானி இளையராஜா

இசையானி இளையராஜா

காதல், காமம் ,கோபம், விரக்தி என எதுவாக இருந்தாலும் இசையில் அதனை புகுத்தி அழகு பார்ப்பவர் இசைஞானி இளையராஜா. அன்னக்கிளி திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான இளையராஜா "மச்சானைப் பாத்தீங்களா" என்ற பாடலை நாட்டுப்புற இசையில் அதன் தரம் குறையாமல் வழங்கியிருந்தார். 80களில் எந்த திருமணத்திலும் இந்த பாடல் ஒலிக்காமல் இருந்தது இல்லை.

அடிக்குது குளிரு...

அடிக்குது குளிரு...

மன்னன் படத்தில் வரும் அடிக்குது குளிரு... துடிக்கிது தளிரு... என்ற மிட்நைட் மசாலா பாணியில் இருக்கும் பாடலை , ரஜினியின் கனத்த குரலில் அவருக்கே உரித்தான ஸ்டைலில் பாடத்தெரியாத ரஜினியையும் பாடவைத்து இருப்பார் இசைஞானி. ஜானகியின் மெல்லியக்குரலில் தேன் ஊற்றும் இந்த பாடல் காதில் இன்று ரீங்காரமிடுகிறது என்றால் அதன் பெருமைக்குரியவர் இளையராஜா தான்.

பேவரைட் இசையமைப்பாளர்

பேவரைட் இசையமைப்பாளர்

80ஸ் , 90ஸ்களுக்கு மட்டுமில்லாமல் 2கே கிட்ஸ்களுக்கும் பேவரைட் இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா தான். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தளபதி படத்தில் வரும் சுந்தரி கண்ணால் ஒரு சேதி பாடல் இன்று வரை பலரின் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸாகவே இருக்கிறது.

பிறந்த நாள் வாழ்த்துக்கள்

பிறந்த நாள் வாழ்த்துக்கள்

ஆத்மார்த்தமான மெலடி, துள்ளல் நிறைந்த காதல், மனதை பிழியும் சோககீதம் என எதுவாக இருந்தாலும், இளையராஜாவின் ரசிகர்களுக்கு அவையெல்லாம் பெரும் விருந்தாக இருக்கின்றன. காலமாற்றத்திற்கு ஏற்ப இசையில் புது புது வித்தைகளை புகுத்திக் கொண்டே இருக்கிறார் இசைஞானி. இளையராஜாவின் இசையின் இயல்பும் அதன் தனிச்சிறப்பும் இன்று குறையவே இல்லை. இளம் தலைமுறையினரும் கொண்டாடும் இசை நாயகனாக அனைவர் மனதிலும் பதிந்து இருப்பதற்கு இதுதான் காரணம். 80 வது பிறந்தநாளை கொண்டாடும் இசைஞானிக்கு இளசுகளும் இணையத்தின் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X