ஸ்பெஷல்ஸ்
இளையராஜா இன்னும் ஒரு சாதனை படைத்துக் கொண்டுள்ளார்.
பார்த்திபனின் டைரக்சனில் இசை ஞானியின் இசையில் வெளியாகியிருக்கும் இவன் படப் பாடல் ஆடியோ கேசட் படுபயங்கரமாக விற்றுத் தீர்ந்துகொண்டிருக்கிறதாம். சமீபத்தில் வந்த புதுப் பட கேசட்களிலேயே அதிகமாக விற்பனையாவது இவன்தானாம்.
சுதா ரகுநாதனின் குரலில் இளையராஜா போட்டிருக்கும் கர்நாடக மெட்டுப் பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாம்.
"தீனா" தந்த முருகதாஸின் "ரமணா"
தீனா முருகதாஸ் அடுத்த படத்தை படு வேகமாக இயக்கி வருகிறார். விஜய்காந்த்- முருகதாஸ் கூட்டணியில்இந்தப் படத்தை இதுவரை விளம்பரம் ஏதும் இல்லாமல் சூட்டிங் நடத்தி வருகிறார்கள். பாபா ரிலீஸ் அன்று இந்தப்படமும் ரிலீஸ் ஆகிறது.
விஜயகாந்த் இதுவரை நடித்திராத வித்தியாசமான பாத்திரத்தில் ரமணாவில் நடித்துள்ளாராம். பகத்சிங் மாதிரிவேடம் என்கிறார்கள். அவருக்கு ஜோடி சிம்ரன். விஜயகாந்தின் ரோல் படத்தில் நன்கு பேசப்படும் என்கிறார்கள்.
ராஜ்ஜியம் மற்றும் தேவன் படத்தில் ஊத்திக் கொண்டதால் இந்தப் படத்தை விஜய்காந்த் வெகுவாகநம்பியிருக்கிறார்.
படத்தின் கிளைமேக்ஸ் இதுவரை தமிழ்ப்படத்தில் காணாதது என்கிறார் படத்தைத் தயாரித்து வரும் ஆஸ்கர்பிலிம்ஸ் ரவிச்சந்திரன்.


Click it and Unblock the Notifications











