நீ வருவாய் என படத்தின் கதையை படுத்துக் கொண்டே கேட்ட அஜித்... அவரை நினைத்து பெருமைப்படும் ராஜகுமாரன்
சென்னை: நீ வருவாய் என திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ராஜகுமாரன்.
படங்களை இயக்கியது மட்டுமின்றி நடிக்கவும் தயாரிக்கவும் செய்திருக்கிறார்.
இந்நிலையில் நீ வருவாய் என திரைப்படம் பற்றி பல சுவாரஸ்யமான தகவல்களை ராஜகுமாரன் கூறியிருக்கிறார்.

சூர்ய வம்சம் லவ் டுடே
நாட்டாமை போன்ற ஒரு கதையை சரத்குமாருக்காக தயார் செய்யச் சொல்லியிருக்கிறார் தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி. முதலில் வானத்தைப்போல கதையை எடுக்க முடிவெடுத்த விக்ரமன் பின்னர் மனம் மாறி சூர்யவம்சம் கதையை படமாக்கினார். படத்தைப் பார்த்த ஆர்.பி.சவுத்ரிக்கு நாட்டாமை போல வலுவாக இல்லாமல் படம் சாந்தமாக நகர்கிறது என்று வெளியிட நாட்டமில்லாமல் அப்போது அவரது தயாரித்த மற்றொரு திரைப்படமான விஜய் நடித்த லவ் டுடே திரைப்படத்தை உடனே ரிலீஸ் செய்திருக்கிறார்.

காதலா காதலா
அதே வேளையில் இயக்குநர் விக்ரமன் கோபித்துக் கொள்ளக் கூடாது என்பதற்காக இன்டெர்வெல் அருகே ஒரு பாடல் வர வேண்டும் என்று நீங்கள் கூறினீர்கள் அல்லவா, அந்தப் பாடலை ரெக்கார்ட் செய்து ஷூட்டிங் நடத்தி விடுங்கள் என்று சூரியவம்சம் திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை ஒரு 50 நாட்கள் தள்ளிப் போட்டாராம் சவுத்ரி. அப்போது உருவானதுதான் காதலா காதலா பாடல் என்று ராஜகுமாரன் கூறியிருக்கிறார். அது மட்டுமின்றி அந்தப் படத்தில்தான் அவருக்கும் நடிகை தேவயானிக்குமான நட்பு அதிகரித்திருக்கிறது.

அஜித் விஜய்
தான் இயக்குவதற்காக ராஜகுமாரன் இளம் வயதிலேயே எழுதிய கதைதான் நீ வருவாய் என. முதலில் அஜித் மற்றும் விஜய் அந்தப் படத்தில் நடித்தால் நன்றாக இருக்கும் என்று இருவரிடமும் கதையை கூறியிருக்கிறார். விஜய் தன்னிடம் கால் சீட் இல்லை என்று கூறிவிட்டு அஜித் நடிப்பதாக ஏற்கனவே ஒப்பந்தமாகியிருந்த கெஸ்ட் ரோலில் நடிக்கிறேன், அஜித் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கட்டும் என்று விஜய் கூறினாராம். அதனை அஜித்திடம் கூறியபோது, நான் சிறப்பு தோற்றத்திலேயே நடிக்கிறேன், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தால் மௌனராகம் திரைப்படத்தில் மோகனுக்கு ஏற்பட்ட நிலைதான் எனக்கும் ஏற்படும் என்று அஜித் நடிக்க மறுத்துவிட்டாராம். பின்னர்தான் விஜய் கதாபாத்திரத்தில் பார்த்திபன் அந்த படத்தில் நடித்திருப்பார்

அஜித் உழைப்பு
அந்தப் படத்தின் கதையைக் கேட்டபோது அஜித் மருத்துவமனையில் அட்மிட்டாகி இருந்ததால், முழு கதையையும் படுத்துக் கொண்டேதான் கேட்டாராம். ஒவ்வொரு காட்சியும் கூறக் கூற ஒன்ஸ் மோர் கேட்டு படுக்கையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்ததாகவும் கதை கேட்ட உடனே தான் நடிப்பதை உறுதி செய்ததாகவும் ராஜகுமாரன் கூறியிருக்கிறார். வாலி படம் வெளியான போதுதான் அதன் படப்பிடிப்பில் 12 நாட்கள் கால் ஷீட் கொடுத்து நடித்திருக்கிறார். படம் உருவான விதத்தை பார்த்து மேற்கொண்டு ஒருநாள் கால் ஷீட் கொடுத்து நடித்தாராம். வேலை என்று வந்துவிட்டால் அஜித் 100 சதவீதம் தன்னுடைய உழைப்பை கொடுப்பார் என்று ராஜகுமாரன் அவரை பற்றி பெருமையாக கூறியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











