»   »  லைட், கேமரா, புரொடக்ஷன்!

லைட், கேமரா, புரொடக்ஷன்!

Subscribe to Oneindia Tamil

தமிழ் சினிமாவின் லேட்டஸ்ட் பிசி மேன் ஆக உள்ள கேமராமேன் ஆர்.டி.ராஜசேகர் படத் தயாரிப்பில்குதிக்கிறார். அவரது முதல் படத்தை சசி இயக்கவுள்ளார்.

இயக்குநர் நடிகர் ஆவதும், நடிகர்கள் இயக்குநர்கள் ஆவதும் தமிழ் சினிமாவில் ரொம்ப சகஜமான விஷயமாகிவிட்டது. ஹீரோ கிடைக்காவிட்டால் தாங்களே ஹீரோக்களாக மாறி விடுகிறார்கள் இயக்குநர்கள். இதனால் யார்வேண்டுமானாலும் நடிக்கலாம், யார் வேண்டுமானாலும் இயக்கலாம் என்ற சூழல் எழுந்துள்ளது.

அதேபோல பல முன்னணி ஒளிப்பதிவாளர்கள் இயக்குநர்களாகியுள்ளனர். பி.சி.ஸ்ரீராம், ராஜீவ் மேனன், ஜீவா,ஆனந்த் ஆகியோரை உதாரணமாக சொல்லலாம். அந்த வரிசையில், தற்போதைய ஹிட் கேமராமேன் ஆனஆர்.டி.ராஜசேகர் தயாரிப்புத் துறைக்குத் தாவுகிறார்.

காக்க காக்க, மன்மதன் உள்ளிட்ட லேட்டஸ்ட் சூப்பர் ஹிட் படங்கள் பலவற்றின் கேமரா மேன் ஆர்.டி.ராஜசேகர்.கோலிவுட்டில் படு கிராக்கியான கேமரா மேனாகவும் மாறியுள்ளார் ஆர்.டி.ஆர்.

முதன் முதலாக ஒரு படத்தைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளார் ராஜசேகர். இதற்காக மாடர்ன் சினிமாஸ் என்றபெயரில் புதிய பட நிறுவனத்தையும் தொடங்கியுள்ளார். அவரது முதல் படத்தை சொல்லாமலே, டிஷ்யூம் ஆகியவெற்றிப் படங்களின் இயக்குநர் சசி இயக்கவுள்ளார்.

சொல்லாமலே படம் சசியை தமிழ் சினிமாவில் வித்தியாசமான இயக்குனராகஅடையாளம் காட்டியது. இப்படத்தின் பெரும் வெற்றியால் வித்தியாசமானகதையம்சம் கொண்ட கதையை நோக்கி இயக்குனர்கள் அலை பாய ஆரம்பித்தனர்என்றே சொல்லலாம்.

இப்படத்தைத் தொடர்ந்து சற்றே இடைவெளி விட்டு சசி இயக்கிய ரோஜாக் கூட்டம்பெரிய வெற்றியை பெற்றது. முதல் படத்தில் நாக்கை அறுத்து காதலின் தீவிரத்தைக்காட்டிய சசி, ரோஜாக் கூட்டத்தில் காதலை மென்மையாக சொன்னார் இப்படம் சசிக்குநல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது.

இதைத் தொடர்ந்து சசியின் இயக்கத்தில் வெளியான படம் டிஷ்யூம். இதுவும் காதல்கதைதான். இந்தப் படம் சூப்பர் ஹிட் ஆனதால் சசி மீது புதிய எதிர்பார்ப்புகிளம்பியுள்ளது. விட்டு விட்டு சூப்பர் ஹிட் கொடுக்கும் சசியை நிம்பி இப்போதுதனது முதல் படத்தை ஒப்படைத்துள்ளார் ராஜசேகர்

சசி இயக்கத்தில், ஆர்.டி.ராஜசேகரின் தயாரிப்பில் உருவாகவுள்ள படத்திற்கு சிவப்பு, மஞ்சள், பச்சை என்றுவித்தியாசமாக பெயரிட்டுள்ளனர். இப்படத்தின் ஸ்கிரிப்ட் ரெடியாகி விட்டதாம்.

முற்றிலும் புதுமுகங்களை வைத்து இப்படத்தை உருவாக்கத் திட்டமிட்டுள்ளனர். தெலுங்கில் பெரும் ஹிட் ஆனபொம்மரிலு படத்தின் உரிமையை இயக்கும் வாய்ப்பு சசியைத் தேடி வந்தது. ஆனால் அதை விட்டு விட்டுசிவப்பு மஞ்சள் பச்சை படத்தை இயக்க அவர் முடிவு செய்துள்ளார். விரைவில் ஷூட்டிங்கை ஆரம்பிக்கப்போகிறார்களாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil