»   »  புகழ் வந்தாலும் ஆடக் கூடாது: ரஜினி

புகழ் வந்தாலும் ஆடக் கூடாது: ரஜினி

Posted By:
Subscribe to Oneindia Tamil

புகழ் என்பது ஆயிரம் கிலோ பாறை போன்றது. நமது தலையில் அது ஏறும்போது நிலையாக இருக்க வேண்டும்.கொஞ்சம் ஆடினாலும் அது நம்மை பதம் பார்த்து விடும் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

விவேக் ஹீரோவாக நடித்துள்ள சொல்லி அடிப்பேன் படத்தின் ஆடியோ கேசட் வெளியீட்டு விழா சென்னைசத்யம் திரையரங்கத்தில் நடந்தது. இதில் இயக்குநர் கே.பாலச்சந்தர் கலந்து கொண்டு முதல் கேசட்டை வெளியிடரஜினிகாந்த் பெற்றுக் கொண்டார்.

முதல் சிடியை ரஜினி வெளியிட, இயக்குநர் ஷங்கர் பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில், ரஜினி பேசுகையில், 30வருடங்களுக்கு முன்பு பாலச்சந்தர் சார் படத்தில் நடித்தபோது பயந்து பயந்து நடித்தேன். அதற்குப் பிறகுஇப்போது ஷங்கரின் சிவாஜி படத்திலும் அதே பயத்துடன்தான் நடித்து வருகிறேன்.

முதல் படத்திலிருந்தே ஒவ்வொரு ஷாட் நடிக்கும்போதும் பயபக்தியுடன்தான் நடித்து வருகிறேன். இப்படத்தில்விவேக்கும் என்னோடு நடித்துள்ளார். அவர் மிகச் சிறந்த அறிவாளி, புத்திசாலி, திறமையானவர், பலவிஷயங்களை தெரிந்து வைத்துள்ளார்.

முதல் முதலாக இருவரும் வீரா படத்தில் சேர்ந்து நடித்தோம். அப்ப சின்னப் பையன் மாதிரி இருப்பார். ஆனால்நல்லா வசனம் பேசினார். இப்போது சிவாஜியிலும் என்னோடு இணைந்து நடிக்கிறார். ஷாட் முடிஞ்சா விவேக்கிட்ட போய் உட்கார்ந்து பேசுவேன். அவருக்கு நிறைய தெரிந்திருக்கிறது.

ஜாதி மீது எனக்கு நம்பிக்கை கிடையாது. விவேக்கைப் பார்த்தபோது பிராமணர் போலத் தோன்றியது. காரணம்அவரோட பேச்சு, நடை, உடை பாவணைகள். ஆனால் நெருங்கிய பிறகுதான் தெரிந்தது அவர் தேவர் என்று.

அதேபோல பாலச்சந்தர் சாரும் ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர். ஆனால், எல்லோரிடம் சகஜகமாக பழகுவார்,பேசுவார். சாதிக்கு யாரும் மரியாதை தர மாட்டார்கள். பணம், புகழுக்குத்தான் மரியாதை. சாதிக்கும், ஒருவரின்குண நலன்களுக்கும் சம்பந்தம் கிடையாது. எனக்கு சாதி நம்பிக்கை கிடையாது.

விவேக் ஹீரோவாக நடித்திருந்தாலும், தொடர்ந்து காமெடியும் செய்ய வேண்டும். அப்பத்தான் நமக்கும் வண்டிஓடும்.

ஒருவர் புகழின் உச்சியில் இருந்தாலும் அடக்கமாக இருக்க வேண்டும். புகழ் என்பது தலையில் வைக்கப்பட்ட1000 கிலோ பாறை மாதிரி. கொஞ்சம் ஆடினாலும் அவ்வளவுதான், காலை பதம் பார்த்து விடும் என்றார்ரஜினிகாந்த்.

நிகழ்ச்சியில் பாலச்சந்தர், ஷங்கர், ராமநாராயணன் உள்ளிட்டோரும் பேசினர். நடிகர் தனுஷ், நடிகை சாயாசிங்,இயக்குநர்கள் தரணி, ராம்கி ராமகிருஷ்ணன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

Read more about: rajini praises vivek

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil