»   »  ரஜின் பார்த்த கன்னட படம்!

ரஜின் பார்த்த கன்னட படம்!

Subscribe to Oneindia Tamil

தனுஷ் நடிக்க பொருத்தமான படம் என்று கூறப்பட்டதால் அரசு என்ற கன்னடப் படத்தை தனது குடும்பத்தோடு சென்று பார்த்தார் ரஜினி.

கன்னடத்தில் வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்ற படம் ஜோகி. இது இப்போது தனுஷ் நடிக்க பரட்டை என்கிற அழகுசுந்தரம் என்ற பெயரில்ரீமேக் ஆகி வருகிறது. ரஜினியை வைத்து அண்ணாமலை, பாட்ஷா ஆகிய பிரமாண்ட வெற்றிப் படங்களைக் கொடுத்த சுரேஷ் கிருஷ்ணாதான்இப்படத்தையும் இயக்கி வருகிறார். (இவர் தான் டப்பா பாபாவையும் இயக்கினார்)

ஜோகியை தமிழில் ரீமேக் செய்து அதில் தனுஷ் நடிக்க வேண்டும் என்று ரெக்கமண்ட் செய்தவரே ரஜினிதான். மருமகன் தமிழில் சூப்பரானஇடத்தைப் பெற வேண்டும் என்பதற்காக இப்போது மெனக்கெட ஆரம்பித்துள்ளார் ரஜினி.

அதனால்தான் ஜோகியை ரீமேக் செய்ய ஆலோசனை கூறிய அவர், திருவிளையாடல் ஆரம்பம் படத்தையும், மிஸ்டர் பாரத் படத்தை காப்பிஅடித்து எடுக்க ஐடியா கொடுத்தார். படம் வளரும் வரை அக்கறையும் காட்டினார்.

இந்த நிலையில் கன்னடத்தில் சமீபத்தில் வெளியான அரசு என்ற படம் குறித்து ரஜினி காதுக்கு செய்தி வந்தது. இப்படத்தில் மறைந்த கன்னட சூப்பர்ஸ்டார் ராஜ்குமாரின் இளைய மகன் புனீத் ராஜ்குமார் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக மீரா ஜாஸ்மின், குத்து ரம்யா ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த கன்னட படத்தை சென்னை போர் பிரேம் பிரிவியூ தியேட்டரில் மனைவி லதா, தனுஷ், அவரது மனைவி ஐஸ்வர்யா, ஆகியோருடன் சேர்ந்துரஜினி பார்த்தார். அவர்களுக்காக இந்தப் படம் பிரத்யேகமாக திரையிடப்பட்டது.

இந்தப் படத்தின் கதை தனுஷுக்குப் பொருத்தமாக இருக்கும் என்று ரஜினியிடம் கூறப்பட்டதால்தான் அவர் பார்த்தாராம். விரைவில் இப்படமும்தனுஷ் நடிப்பில் ரீமேக் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிவாஜி சூட்டிங்குக்காக அமெரிக்கா கிளம்பும் முன் இதைப் பார்த்தார் ரஜினி.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil