சிவாஜிக்கு யூ

By Staff

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள சிவாஜி படத்துக்கு யூ சான்றிதழை சென்சார் வாரியம் கொடுத்துள்ளது.

ரஜினிகாந்த் நடிக்க, ஏவி.எம் தயாரிக்க, ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள பிரமாண்டப் படைப்பான சிவாஜி படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து விட்டதால் மே 31ம் தேதி படம் திரைக்கு வரும் என ஏவி.எம். நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இதைத் தொடர்ந்து படத்தை தணிக்கை வாரியத்திற்கு ஏவி.எம். நிறுவனம் அனுப்பி வைத்தது. படத்தைப் பார்த்த தணிக்கை வாரிய உறுப்பினர்கள் படம் பிரமாதமாக வந்துள்ளதாக பாராட்டியதோடு, யூ சான்றிதழையும் கொடுத்துள்ளனர்.

தணிக்கை வாரிய உறுப்பினர்கள் நேற்று படத்தைப் பார்த்தனர். படம் முழுக்க பிரமாதமாக வந்துள்ளதாக ஷங்கரை அவர்கள் பாராட்டினர். படத்தில் ஒரு காட்சி கூட வெட்டப்படவில்லையாம்.

பொழுது போக்கு அம்சங்களுடன் நல்ல செய்தியையும் படத்தில் கொடுத்துள்ளதாக தணிக்கை வாரிய உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். இப்படி ஒரு படத்தை நான் பார்த்ததே இல்லை என்றும் அவர் ஆச்சரியப்பட்டார்.

இதேபோல படத்தின் டிரைலரையும் சென்சார் போர்டு அனுமதித்து விட்டது. இதையடுத்து விரைவில் தியேட்டர்களிலும், தொலைக்காட்சி சானல்களிலும் சிவாஜி டிரைலர் கலக்கும் என எதிர்பார்க்கலாம்.

ரஜினி, ஷங்கர், ஏ.ஆர்.ரஹ்மான் தவிர படத்தில் மேலும் பல பெருந்தலைகளும் உள்ளனர். கே.வி.ஆனந்த் கேமராவைக் கையாண்டுள்ளார். பிரபுதேவா, தோட்டா தரணி, மணீஷ் மல்ஹோத்ரா ஆகியோரும் படத்தில் உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X