»   »  தண்ணீர் பிரச்சினையில் சூப்பர் ஸ்டார்

தண்ணீர் பிரச்சினையில் சூப்பர் ஸ்டார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மீண்டும் ரஜினியைத் தேடி காவிரி பிரச்சனை வந்துவிட்டது. அவரை நோக்கி ஒருபுதுப் பிரச்சினை பாய்ந்தோடி வர ஆரம்பித்துள்ளது.

கடந்த வாஜ்பாய் ஆட்சியின்போது தமிழகத்திற்கும், கர்நாடகத்திற்கும் இடையேகாவிரிப் பிரச்சினை பெரும் சூட்டைக் கிளப்பியது. தமிழ் சினிமாக்காரர்கள் அத்தனைபேரும் திரண்டு நெய்வேலிக்குப் போய் கர்நாடகத்துக்கு மின்சாரத்தை ரத்து செய்யக்கோரி போராட்டம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினர்.

ஆனால் இப்போராட்டத்தில் ரஜினி கலந்து கொள்ளவில்லை. மாறாக அடுத்த நாள்சென்னையில் தன்னந்தனியாக உண்ணாவிரதம் இருந்தார். கூடவே வேறு சிலரும்உண்ணாவிரதம் இருந்தனர், மேடைக்கு வந்து ரஜினிக்கு ஆதரவு கொடுத்தனர்.

அன்று மாலை உண்ணாவிரதம் மடிந்ததும் ரஜினி ஒரு அறிக்கையை வெளியிட்டார்.அந்த அறிக்கையை அப்போது ரஜினிக்கு நெருக்கமாக இருந்த சரத்குமார் வாங்கிவாசித்தார். அதில்,

தேசிய அளவிலான நிதி நீர் இணைப்புத் திட்டத்தை மத்திய அரசு வேகமாகநிறைவேற்ற வேண்டும். இந்தத் திட்டத்திற்காக ரூ. 1 கோடி பணம் தருவேன் என்றுரஜினி அறிவித்திருந்தார்.

ஆனால் அந்தத் திட்டம் எப்போது வரும் என்பது தெரியவில்லை. இப்போது மேட்டர்என்னவென்றால் 1 கோடி ரூபாய் தருவதாக கூறிய ரஜினி இந்தத் திட்டத்தைவிரைவாக மேற்கொள்ளுமாறு கோரி முதல்வர் கருணாநிதியை சந்தித்துப் பேசவேண்டும். ரூ. 1 கோடி நிதியை கொடுத்து திட்டத்தை ஆரம்பிக்குமாறு மத்திய, மாநிலஅரசுகளை வற்புறுத்த வேண்டும் என்ற கோரிக்கை கிளம்பியுள்ளது.

இதுதொடர்பாக நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தட்டி போர்டுகள்வைக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் டிஜிட்டல் போர்டுகளையும் வைத்துள்ளனர்.இதனால் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வேண்டுமென்றே தன்னை சீண்டிப் பார்க்க சில சக்திகள் இந்த வேலையில்இறங்கியுள்ளதாக ரஜினி தரப்பு நம்புகிறதாம்.

ஷங்கரின் சிவாஜி படத்திலும் கூட நதி நீர் இணைப்பு குறித்து சொல்லப்பட்டுள்ளதுஎன்பது இங்கு குறிப்பிட்டாக வேண்டிய விஷயம்.

Read more about: rajinis new problem

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil