எந்திரன் ரஜினி உடைகள் ஏலம்!

ஹாலிவுட்டின் பிரபல ஹீரோ ஹீரோயின்கள் பயன்படுத்திய உடைகளை ஏலத்தில் விடுவது வழக்கம். அவை மிகப் பெரிய விலைக்கு ஏலம் போய் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தும்.
இந்த டிரன்ட் இப்போது தமிழ் சினிமாவுக்கும் வந்துள்ளது.
தமிழில் எந்திரன் என்ற ஹாலிவுட்டுக்கு நிகரான படத்தைக் கொடுத்த சன் பிக்சர்ஸ் நிறுவனம், இப்போது அந்தப் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியும் ஐஸ்வர்யா ராயும் பயன்படுத்திய உடைகளை ஏலம் விடப் போகிறது.
இணைய தளத்தின் மூலம் இந்த ஏலம் நடக்கும் என்றும், இதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்றும் சன் பிக்சர்ஸ் தெரிவித்துள்ளது.
இந்தியப் படம் ஒன்றின் உடைகள் ஏலத்தில் விடப்படுவது இதுதான் முதல் முறை.
Comments


Click it and Unblock the Notifications