'சிறுத்த' பார்த்த ரஜினி
மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் தேஜா நடித்துள்ள சிறுத்த படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்னையில் பார்த்து ரசித்தார்.
| Click here for more images |
மெகா ஸ்டாருக்கும், சூப்பர் ஸ்டாருக்கும் இடையே நீண்ட காலமாக நல்ல தோழமை நிலவி வருவது அனைவரும் அறிந்ததே. ராணுவ வீரன் படம்தான் சிரஞ்சீவிக்கு தமிழில் முதல் படம். அப்படத்தில் ரஜினிதான் ஹீரோ. சிரஞ்சீவி வில்லனாக நடித்திருப்பார்.
பின்னர் சிரஞ்சீவி தமிழில் மாப்பிள்ளை படத்தைத் தாயரித்தபோது அதில் நாயகனாக நடித்து தனது நட்புக்கு மரியாதை கொடுத்தார் ரஜினி.
இப்போது சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் தேஜா நடிகராக அறிமுகமாகியுள்ளார். அவர் நடித்துள்ள சிறுத்த படம் சென்னையிலும் ரிலீஸாகியுள்ளது.
தேஜாவுக்கு ஜோடியாக நேகா ஷர்மா நடித்துள்ளார்.
இந்த நிலையில் ரஜினிக்காக சிறுத்த படத்தின் சிறப்புக் காட்சிக்கு சிரஞ்சீவி ஏற்பாடு செய்திருந்தார். சென்னையில் உள்ள ஃபோர் பிரேம்ஸ் பிரிவியூ தியேட்டரில் இக்காட்சிக்கு நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
படத்தைப் பார்த்து ரசித்த ரஜினி, ராம் சரண் தேஜாவை வாழ்த்திப் பாராட்டினார்.
Comments


Click it and Unblock the Notifications