ரஜினி 40... அபூர்வராகங்கள் முதல் லிங்கா வரை!

By Shankar

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் தனது திரையுலக வாழ்க்கையில் இன்று 40ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார்.

இந்த நாற்பது ஆண்டுகளில் 35 ஆண்டுகளுக்கும் மேல் அவர் உச்ச நட்சத்திரமாகத் தொடர்கிறார் என்பதுதான் பிரமிப்பூட்டும் விஷயம்.

பெங்களூர் - திருப்பத்தூர் சாலையில் சாதாரண பேருந்து நடத்துநராக இருந்த ரஜினி, வாழ்க்கையில் பெரும் சோதனைகளைச் சந்தித்தவர். ஒருவழியாக சென்னைக்கு கிளம்பி வந்தார். ஒருமுறை சென்னை அண்ணா சாலையில், எல்ஐசிக்கு எதிரே உள்ள பேருந்து நிறுத்த மேடையில் படுத்து இரவைக் கழித்த அனுபவமெல்லாம் உண்டு ஆரம்ப கால ரஜினிக்கு.

அபூர்வ ராகங்கள்

அபூர்வ ராகங்கள்

சென்னை திரைப்படக் கல்லூரியில் மிக சிரமத்துடன் படித்து முடித்து வெளிவந்தார். ஆகஸ்ட் 18, 1975-ல் அவர் நடித்த முதல் படமான அபூர்வ ராகங்கள் வெளியானது. அந்தப் படத்துக்குப் பிறகு, ரஜினிக்கு நிற்க நேரமில்லை. தொடர்ந்து படங்கள். ஒரு ஆண்டில் அதிகபட்சமாக 20 படங்களுக்கு மேல் வில்லனாக, குணச்சித்திர நடிகராக, ஹீரோவாக நடித்தார்.

சூப்பர் ஸ்டார்

சூப்பர் ஸ்டார்

பைரவி என்ற படத்தில் நடித்தபோதுதான் அவருக்கு முதல் முறையாக சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தைச் சூட்டினர். ஆரம்பத்தில் அந்தப் பட்டத்தைப் போட்டுக் கொள்ளத் தயங்கினார் ரஜினி. காரணம் அப்போது தமிழ் திரையுலகின் ஜாம்பவான்கள் எம்ஜிஆரும், சிவாஜியும் களத்தில் நின்றனர். அதனால் அந்தப் பட்டம் வேண்டாம் என்றார். ஆனால் திரையுலகினர் அவரை வற்புறுத்தி சூப்பர் ஸ்டார் பட்டம் அளித்தனர்.

37 ஆண்டுகளுக்கும் மேல்...

37 ஆண்டுகளுக்கும் மேல்...

நடிக்க வந்த மூன்றாவது ஆண்டில் சூப்பர் ஸ்டார் ஆன ரஜினி, தொடர்ந்து 37 ஆண்டுகளாக முதல் நிலை நடிகராக கோலோச்சி வருகிறார் திரையுலகில். அவரது படங்களில் தோல்விப் படங்கள் என்பதை விரல்விட்டு எண்ணிவிடலாம்.
ஒரு ஹீரோவாக அதிகபட்ச வெற்றிப் படங்கள் தந்தவர் ரஜினிதான்.

வெற்றிகள் கொஞ்சமல்ல

வெற்றிகள் கொஞ்சமல்ல

இந்த நாற்பதாண்டுகளில் ரஜினி நடித்தவற்றில் பதினெட்டு படங்கள் நூற்றம்பது நாட்களிலிருந்து 200 நாட்கள் வரை ஓடியிருக்கின்றன. 38 படங்கள் நூறு நாட்களைத் தாண்டியவை. நான்கு படங்கள் ஒருவருடத்திற்கும் மேல் ஓடியவை!

இந்தியில் மூன்று வேடங்களில்..

இந்தியில் மூன்று வேடங்களில்..

பொதுவாக பாலிவுட்டில் ஒரு சென்டிமென்ட் உண்டு. அங்கு மூன்று வேடங்களில் நடித்து எந்த நடிகரும் ஜெயித்ததில்லை, அமிதாப் உள்பட. விதிவிலக்கு ரஜினிதான். அவரது மூன்று முகம் ரீமேக், 'ஜான் ஜானி ஜனார்தன்' படம் 25 வாரங்கள் ஒடி அனைவரையும் அசர வைத்தது!

பல மொழிகள்...

பல மொழிகள்...

தமிழ், இந்தி மட்டுமல்ல... கன்னடம், தெலுங்கு, வங்காளம் மற்றும் ஆங்கிலத்தில் நேரடியாக நடித்துள்ளார் ரஜினி. வங்காளம், ஆங்கிலத்தில் தலா ஒரு படம் (பாக்ய தேவ்தா, ப்ளட்ஸ்டோன்) நடித்துள்ளார்.

நான்கு தலைமுறை சினிமா

நான்கு தலைமுறை சினிமா

கறுப்பு வெள்ளையில் அறிமுகமான ரஜினி, வண்ணத் திரைப்படம், முப்பரிமாணப் படம் மற்றும் அனிமேஷன் என சினிமாவின் நான்கு வடிவங்களிலும் நடித்துள்ளார்.

ரஜினி - கமல்

ரஜினி - கமல்

தமிழ் சினிமாவில் இரு முன்னணி நடிகர்கள்தான் தொடர்ந்து 40 ஆண்டுகளுக்கு மேல், அதுவும் முதல்நிலை நடிகர்களாகவே இருக்கின்றனர். ஒருவர் கமல்ஹாஸன். அவர் 5 வயதில் நடிக்க வந்தார். சில படங்களில் குழந்தை வேடங்களில் நடித்த பிறகு, அவர் இளைஞனாக மாறும் பெரிய வாய்ப்புகள் இல்லை. ரஜினி அறிமுகமான அபூர்வ ராகங்களில் கமல்தான் ஹீரோ. அன்று தொடங்கி இந்த நாற்பது ஆண்டுகளில் ரஜினியும் கமலும் இணைந்தே பயணிக்கின்றனர், தமிழ் சினிமாவின் ஆளுமைகளாக.

40-ம் ஆண்டில்..

40-ம் ஆண்டில்..

அப்படிப் பார்த்தால் ரஜினி - கமல் இருவருக்குமே இது நாற்பதாவது ஆண்டு (கமல் ஏற்கெனவே பொன்விழா கொண்டாடிவிட்டார்!). இப்போதைய நிலைமையைப் பார்த்தால் இன்னும் பத்தாண்டுகள் ரஜினி தன் நடிப்பைத் தொடர்ந்து, பொன் விழா கொண்டாடுவார் போலிருக்கிறது!

அடுத்தடுத்த 3 படங்கள்..

அடுத்தடுத்த 3 படங்கள்..

இந்த ஆண்டு ரஜினியின் லிங்கா வரவிருக்கிறது. அடுத்து ஷங்கருடன் எந்திரன் 2, கேஎஸ் ரவிகுமாருடன் ஒரு படம், கோச்சடையான் 2 என ரஜினியின் எதிர்காலப் படங்களின் பட்டியல் தொடர்கிறது!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X