twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரஜினி தலைமையில் எஸ் ராமகிருஷ்ணனுக்கு பாராட்டுவிழா!

    By Shankar
    |

    Rajinikanth
    சூப்பர் ஸ்டார் ரஜினியின் தலைமையில் பிரபல எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணனுக்கு பாராட்டு விழா நடக்கிறது.

    வரும் பிப்ரவரி 2-ம் தேதி சென்னை காமராஜர் அரங்கில் நடக்கும் இந்த விழாவில் எழுத்துலக பிரபலங்கள் அனைவரும் பங்கேற்கிறார்கள்.

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடல் நலம் பெற்று வந்த பிறகு, அதிகாரப்பூர்வமாக பங்கேற்கும் முதல் வெளி நிகழ்ச்சி இதுவே.

    இந்த விழாவை மனுஷ்யபுத்திரனின் உயிர்மை பதிப்பகம் நடத்துகிறது.

    சர்வதேச அளவில் இலக்கியத்துக்காக வழங்கப்படும் கனடா நாட்டின் 'இயல் விருது' இந்த ஆண்டு எஸ் ராமகிருஷ்ணனுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    எழுத்துத் துறையில் இது மிக உயர்ந்த விருதாகக் கருதப்படுகிறது. கனடாவில் நடக்கும் விழாவில் பங்கேற்று இந்த விருதினை எஸ் ராமகிருஷ்ணன் பெற்றுக் கொள்கிறார். அதற்கு முன் அவரை உயிர்மைப் பதிப்பகம் கவுரவிக்கிறது.

    இந்த விழாவில் கவிஞர் வைரமுத்து, எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி, பேராசிரியர் கு ஞானசம்பந்தன், இறையன்பு உள்பட பலரும் பங்கேற்றுப் பேசுகிறார்கள்.

    ஒரு இலக்கிய விழாவில் ரஜினி பங்கேற்று சிறப்புரையாற்றவிருப்பது இதுவே முதல்முறை.

    English summary
    For the first time after his health recovery, Superstar Rajinikanth is going to participate in a felicitation event for writer S Ramakrishnan. The event will be held at Kamarajar Memorial Hall, Chennai on February 2nd.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X