ஜக்குபாய் படம் பார்த்த ரஜினி-கமல்!

சரத்குமார்-ஸ்ரேயா நடிப்பில், கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஜக்குபாய். சந்திரமுகி படத்துக்கு முன் ரஜினி நடிப்பதாக இருந்து, பின்னர் கைவிடப்பட்ட படம் இது.
இந்தப் படம் தயாரிப்பில் இருந்தபோதே, படக்குழுவைச் சேர்ந்த சிலரால் இணையதளங்களில் கசியவிடப்பட்டது.
அடுத்த சில நாட்களில் டிவிடி வடிவிலும் 15 ரூபாய்க்குக் கிடைத்தது. ஆனாலும் பார்க்க ஆளில்லை.
பின்னர் இந்த விவகாரத்தை வைத்து பெரிய அளவில் நடவடிக்கைகளில் இறங்கினர் சரத்குமாரும் ராதிகாவும். அதற்கு ரஜினி, கமல் என திரையுலகப் பிரமுகர்களையும் துணைக்கு அழைத்துக் கொண்டனர். முதல்வரிடம் மனுகொடுத்து, திருட்டு டிவிடியில் படம் பார்ப்பவர்களுக்கும் குண்டர் சட்ட தண்டனை என்ற புரட்சிகரமான அறிவிப்பு வெளியிட வைத்தனர்.
இந்த நிலையில், இந்தப் படத்தை கலைஞர் டிவியின் துணையுடன் திரைக்கு கொண்டு வந்தது ராடன் நிறுவனம்.
படத்துக்கு மேலும் விளம்பரம் தேடி, அதன் பிரிமியர் காட்சியை சென்னையில் ஏற்பாடு செய்திருந்தனர். சென்னை சத்யம் வளாகத்தில் நடந்த இந்த சிறப்புக் காட்சிக்கு ரஜினி, கமல், அர்ஜுன், வடிவேலு, தனுஷ், பார்த்திபன், நடிகைகள் சிம்ரன், சங்கீதா, ஆண்ட்ரியா என பலரும் வந்திருந்தனர்.
இந்த நிகழ்ச்சிக்கு வந்த அனைவரிடமும் முதல்வர் நிவாரண நிதிக்காக ஒரு தொகை வசூலிக்கப்பட்டது. இதற்கென சத்யம் வளாகத்தில் ஒரு பெரிய உண்டியல் வைக்கப்பட்டிருந்தது. பலரும் அதில் பணம் போட்டனர், 'இந்த உண்டியல் விஷயத்தை ராதிகாவும் சரத் குமாரும் கமுக்கமாக மறைச்சிட்டாங்களே'! என்ற புலம்பலுடன்!


Click it and Unblock the Notifications











