சூப்பர் ஸ்டார் - லதா ரஜினி தம்பதிகளின் 32வது திருமண நாள்!

By Shankar

சென்னை: இன்று சூப்பர் ஸ்டார் ரஜினி - லதா ரஜினி தம்பதிக்கு 32வது திருமண நாள். இதனை ரஜினியின் ரசிகர்கள் பல்வேறு நற்பணிகள் செய்து கொண்டாடி வருகின்றனர்.

திரையுலக வாழ்க்கையில் முன்னுதாரணம் ரஜினி என்றால், சமூக வாழ்க்கை, இல்லற வாழ்க்கையில் ரஜினி - லதா தம்பதி சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார்கள் எனலாம்.

இல்லற வாழ்வின் மகத்துவத்தை இளைஞர்களுக்கு எந்தப் பிரச்சாரமும் இல்லாமல் தங்கள் வாழ்க்கை மூலம் உணர்த்தும் தம்பதிகள் ரஜினி - லதா என்றால் மிகையல்ல.

ஆடம்பர திருமணம் வேண்டாம்...

ஆடம்பர திருமணம் வேண்டாம்...

தனது பிறந்த நாளைக் கூட பெரிதாகக் கொண்டாட விரும்பாதவர் ரஜினி. லதாவை காதலித்து, கைப்பிடிக்க முடிவு செய்தபோது, அந்தத் திருமணம் மிக எளிமையாக, பெரிய கூட்டம் ஏதுமில்லாமல் நடக்க வேண்டும் என்றே விரும்பினார். எனவே திருப்பதியில் திருமணத்தை வைத்திருந்தார்.

திருமணத்துக்கு முதல் நாளே திருமண போட்டோ

திருமணத்துக்கு முதல் நாளே திருமண போட்டோ

திருமணத்துக்கு ஒரு நாள் முன்பு பத்திரிகையாளர்களை தன் வீட்டுக்கே அழைத்தார்.
'நாளைக்கு காலைல திருப்பதியில் எனக்கும் லதாவுக்கும் திருமணம். இது காதல் திருமணம். ஆனால் யாரும் வர வேண்டாம்.." என்று கூறிவிட்டு, தானும் லதாவும் திருமணக் கோலத்தில் இருக்கும் படத்தைக் கொடுத்தார்.

வந்தால்... உதைப்பேன்

வந்தால்... உதைப்பேன்

அப்போது ஒரு நிருபர் இதையும் மீறி நாங்க திருமணத்துக்கு வந்தா... என்று கேட்டு நிறுத்த, ஒரு கணம் கூட யோசிக்காமல் ரஜினி சொன்னது, 'உதைப்பேன்'. ஆனால் அடுத்த சில நொடிகளில் என்ன நினைத்தாரோ, அத்தனை நிருபர்களிடமும், 'ஸாரி.. ரொம்ப ஹார்ஷா பேசிட்டேன். ஸாரி... நண்பர்களே, இது சம்திங் பர்சனல். கடவுளின் சந்நிதானத்தில் ஆத்மார்த்தமாக நடக்க வேண்டும் என விரும்பினேன். அதற்கு மேல் இதைப் பேச வேண்டாமே" என்றார்!

32 ஆண்டுகள்..

32 ஆண்டுகள்..

இருவருக்கும் திருமணமாகி 32 ஆண்டுகள் ஆகின்றன. திரையுலகில் திருமண பந்தங்களின் ஆயுள் எப்படி என்பதை உலகறியும். ஆனால் அங்கும் ஒரு உதாரணத் தம்பதிகளாய், அனைவருக்கும் எடுத்துக்காட்டாய் திகழ்கிறார்கள் ரஜினி - லதா.

எங்களுக்கும் சண்டை வரும்...

எங்களுக்கும் சண்டை வரும்...

மணிவண்ணன் மகள் திருமணத்தின்போது மனைவி எதிரில் அமர்ந்திருக்க ரஜினி சொன்ன வார்த்தை இது: எனக்கும் என் மனைவிக்கும் சண்டையே வருவதில்லையா என்று நீங்கள் நினைக்கக் கூடும். அதெல்லாம் நிறைய வரும். யாராவது ஒருத்தர் விட்டுக் கொடுத்திடுவோம். பெரும்பாலும் நான் விட்டுக் கொடுத்துடுவேன். பிரச்சினையே இருக்காது,' என்று கூற, லதா வெட்கத்தில் முகம் சிவந்தார்.

கணவருக்காக எதையும் செய்யும் லதா...

கணவருக்காக எதையும் செய்யும் லதா...

கணவர் ரஜினி உடல்நலம் குன்றியிருந்தபோது, லதா ரஜினி செய்தவை அவரது மன உறுதி மற்றும் நெருக்கடியை சமாளிக்கும் திறமையைக் காட்டியது. கணவர் உடல் நலம் தேறி வந்ததும் திருப்பதிக்குப் போய் முடி காணிக்கை செலுத்தியது நினைவிருக்கலாம்.

ரசிகர்கள் கொண்டாட்டம்

ரசிகர்கள் கொண்டாட்டம்

ஒரு நடிகரின் திருமண நாளை அவரது ரசிகர்கள் விமரிசையாய் கொண்டாடுவது ரஜினிக்கு மட்டும்தான். இன்று தமிழகம் முழுவதும் அன்னதானம், உதவித் தொகை வழங்குதல், ஏழைக் குழந்தைகளைத் தத்தெடுத்தல் என ரஜினி ரசிகர்கள் ஏராளமான நற்பணிகளைச் செய்து வருகின்றனர்.

இன்னும் பல்லாண்டு நல்ல ஆரோக்கியத்துடன் வாழ்ந்து இளையோருக்கு வழிகாட்டியாய் ரஜினி - லதா தம்பதி திகழட்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X