பில்லாவை ரிலீஸ் செய்வாரா ரஜினி?

80களில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் பில்லா. ரஜினிகாந்த்தின் சூப்பர் டூப்பர் ஹிட் படங்களில் இன்றளவும் முன்னணியில் உள்ள ஒரு படம். இப்படத்தை இப்போது அஜீத், நயனதாரா, நமீதா நடிக்க ரீமேக் செய்துள்ளனர்.
சமீபத்தில் இப்படத்தின் ஆடியோ ரஜினி வீட்டில் எளிமையாக வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், அஜீத், விஷ்ணுவர்த்தன், யுவன் ஷங்கர் ராஜா, தயாரிப்பாளர் ஆனந்தா சுரேஷ், ஆடியோ வெளியீட்டு உரிமையை வாங்கியுள்ள அய்ங்கரண் கருணாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நேற்று முதல் பில்லா படப் பாடல்கள் மார்க்கெட்டுக்கு வந்துள்ளன. முதல் நாளிலேயே விற்பனை படு சூடாக இருந்ததாக தகவல்கள் கூறுகின்றன.
பில்லா ரீமேக்கின் ஆரம்பத்திலிருந்தே அதில் அதிக ஈடுபாட்டோடும், ஆதரவோடும் இருந்து ஆடியோவையும் வெளியிட்டுள்ள ரஜினிகாந்த், பட ரிலீஸையும் தொடங்கி வைக்கக் கூடும் என்று தெரிகிறது.
Comments


Click it and Unblock the Notifications