கோச்சடையானுக்காக ரஜினி ஒரிஜினலாக ஆடிய பரத நாட்டியம்!

By Shankar

சென்னை: கோச்சடையானுக்காக சூப்பர் ஸ்டார் ரஜினியே ஆடியுள்ள பரத நாட்டியம் குறித்துதான் இப்போது பேச்சே.

மோஷன் கேப்சரிங் தொழில்நுட்பத்தில் வரும் படம் என்பதால் படத்தில் நிஜ ரஜினியையே பார்க்க முடியாதா என ரசிகர்கள் மத்தியில் கேள்வி இருந்தது.

ஆனால் படத்தில் நிஜ ரஜினி வரும் காட்சிகளும் நிறைய உள்ளனவாம்.

படத்துக்காக முதலில் சௌந்தர்யா ரஜினி வெளியிட்ட ரஜினியின் ருத்ர தாண்டவ டிசைன் கிராபிக்சோ, அனிமேஷனோ கிடையாதாம். அது ரஜினி இந்தப் படத்துக்காக ஆடிய ருத்ர தாண்டவ நடனக் காட்சி என்ற தகவலை இப்போது வெளியிட்டுள்ளனர்.

ரஜினியின் பரத நாட்டியம்

ரஜினியின் பரத நாட்டியம்

இந்தப் படத்துக்காக ரஜினி ஆடியுள்ள பரத நாட்டியம் ரசிகர்களை வெகுவாகக் கவரும் என்கிறார்கள். உடல்நிலை சரியான பிறகு ரஜினி மிகவும் சிரத்தையும் பயிற்சியும் எடுத்து இந்த நாட்டியத்தை ஆடினாராம்.

காட்சி விருந்து

காட்சி விருந்து

படத்தில் இந்தக் காட்சியை ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் காட்சி விருந்தாக வைத்திருக்கிறார்களாம்.

அதேபோல சண்டைக் காட்சிகள், மற்றும் குதிரை சவாரி காட்சிகளிலும் அனிமேஷன் அல்லாத, ஒரிஜினல் காட்சிகளே இடம்பெற்றுள்ளனவாம்.

ரஜினி பிறந்த நாளில்

ரஜினி பிறந்த நாளில்

கிட்டத்தட்ட அனைத்து வேலைகளும் முடிந்து, பிரமோஷன் பணிகளும் தொடங்கிவிட்டன கோச்சடையானுக்கு. ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பின்படி ரஜினியின் பிறந்த நாளில் இந்தப் படம் வெளியாவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

பாடல் செம ஹிட்...

பாடல் செம ஹிட்...

இதற்கிடையில், கோச்சடையான் படத்திலிருந்து வெளியிடப்பட்டுள்ள ஆரம்பப் பாடல் சூப்பர் ஹிட்டாகியுள்ளது. படத்தின் முதல் டீசரை விமர்சித்தவர்கள் கூட, இந்தப் பாடலை பாராட்டியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X