பொங்கலுக்கு சூப்பர் ஸ்டாரின் கோச்சடையான்!- இது அதிகாரப்பூர்வ அறிவிப்பு

By Shankar

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கோச்சடையான் படம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஜினியின் பல கோடி ரசிகர்களுக்கு பெரும் இன்ப அதிர்ச்சி தரும் செய்தியாக இது அமைந்துள்ளது.

முதல் படம்

முதல் படம்

கோச்சடையான் படத்துக்கு பல சிறப்புகள் உண்டு. இந்தப் படம்தான் இந்தியாவின் முதல் மோஷன் கேப்சரிங் 3டி படம். ரூ 100 கோடியில் பல நாட்டு தொழில்நுட்ப நிபுணர்களின் உழைப்பில் உருவாகியுள்ளது.

கோச்சடையான் - ராணா

கோச்சடையான் - ராணா

இந்தப் படத்தில் மதுரையை தலைநகராகக் கொண்டு தர்ம ஆட்சி செலுத்திய மன்னன் கோச்சடையான் மற்றும் அவர் மகன் இளவரசன் ராணா ஆகிய இரு வேடங்களில் வருகிறார் ரஜினி.

தீபிகா படுகோன்

தீபிகா படுகோன்

ரஜினிக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடித்துள்ளார். இவர்களுடன் சரத்குமார், ஷோபனா, ருக்மணி, நாசர், ஜாக்கி ஷெராப் என பெரும் நடிகர் பட்டாளமே நடித்துள்ளது.

கேஎஸ் ரவிக்குமார்

கேஎஸ் ரவிக்குமார்

இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இயக்க மேற்பார்வை பொறுப்பை கேஎஸ் ரவிக்குமார் கவனித்தார். ரஜினி, தீபிகா நடித்த நிஜ காட்சிகள் அனைத்தையும் இவர் மேற்பார்வையிலேயே இயக்குநர் சௌந்தர்யா படமாக்கினார்.

3 ஆண்டுகள்...

3 ஆண்டுகள்...

சிங்கப்பூரில் சிகிச்சைப் பெற்று ரஜினி திரும்பிய பிறகு சில மாதங்கள் கழித்து இந்தப் படத்தின் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன. லண்டனில் சில நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. பின்னர் கேரளாவிலும் சென்னை ஸ்டுடியோக்களிலும் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. தமிழ், இந்திப் பதிப்புகளுக்கு ரஜினியே சொந்தக் குரலில் டப்பிங் பேசினார்.

ஜப்பான் மொழி

ஜப்பான் மொழி

ஜப்பான் மொழியில் வெளியாகும் கோச்சடையானுக்காக, ஜப்பானிய மொழி கற்று படத்தில் சொந்தக் குரலில் டப்பிங் பேசியுள்ளார் ரஜினி. ஏ ஆர் ரஹ்மான் இசையில் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலையும் தமிழ், இந்தியில் ரஜினி பாடியுள்ளார்.

விக்ரம் சிம்மா

விக்ரம் சிம்மா

தெலுங்கில் இந்தப் படத்துக்கு விக்ரம் சிம்ஹா என்று தலைப்பிட்டுள்ளனர். தெலுங்கில் மிகப் பெரிய அளவில் இந்தப் படம் வெளியாகிறது. தெலுங்கானா பிரச்சினையில் தெலுங்கு நடிகர்களின் படங்கள் வெளியாகாமல் தவிப்பதால், எந்தப் பிரச்சினையும் இல்லாத கோச்சடையானை வெளியிடுவதில் ஆந்திர சினிமா விநியோகஸ்தர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

எல்லா வேலைகளும் ஓவர்..

எல்லா வேலைகளும் ஓவர்..

படத்தின் அனைத்து வேலைகளும் தற்போது முடிந்துவிட்டன. ஒரு டீசர் மற்றும் ஒரே ஒரு பாடலின் ஒலி டீசர் மட்டுமே இப்போதைக்கு வெளியில் வந்துள்ளது. இதில் பாடல் டீசர் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

டிசம்பரில் ஆடியோ

டிசம்பரில் ஆடியோ

இந்தப் படத்தின் முழுமையான இசையை கடந்த அக்டோபரில் வெளியிடுவதாகக் கூறியிருந்தார்கள். இப்போது டிசம்பர் மாதம் ஆடியோ ரிலீஸ் என அறிவித்துள்ளனர்.

இணை தயாரிப்பாளர்

இணை தயாரிப்பாளர்

படத்தின் இணை தயாரிப்பாளரும் மீடியா ஒன் அதிபருமான டாக்டர் முரளி மனோகர் இதுகுறித்து அளித்துள்ள பேட்டியில், "அனைத்துப் பணிகளும் முடிந்து, இப்போது பின்னணி இசை சேர்ப்பு நடக்கிறது. டிசம்பரில் ஆடியோ வெளியிடப்படும்.

பொங்கலுக்கு...

பொங்கலுக்கு...

வரும் பொங்கல் பண்டிகையையொட்டி, ஜனவரி 10-ம் தேதியே கோச்சடையானை வெளியிட திட்டமிட்டுள்ளோம். விளம்பர வேலைகள் டிசம்பரில் தொடங்கும்,' என்று அறிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X