மே 20-ல் ரஜினியின் அடுத்த படம்... ரெண்டு ஹீரோயின்கள்... கே எஸ் ரவிக்குமார் இயக்குகிறார்!
ரஜினியின் அடுத்த படம் குறித்த ஆரூடங்கள், ஹேஷ்யங்கள்... இப்போது ஒரு செய்தி வடிவத்துக்கு வந்திருக்கின்றன.
இத்தனைக்கும் இன்னும் இந்தப் படத்தை அதிகாரப்பூர்வமாக ரஜினி அறிவிக்கவில்லை.
ஆனால் செய்தி உறுதியானதுதான் என்கிறார்கள். இந்தப் படத்தை இயக்கப் போகிறவர் ரஜினியின் நண்பர் கேஎஸ் ரவிக்குமார்.

இரண்டு நாயகிகள்
ரஜினிக்கு ஜோடியாக இந்தப் படத்தில் இரண்டு நாயகிகள். ஒருவர் அனுஷ்கா. மற்றொருவர் சோனாக்ஷி சின்ஹா என்கிறார்கள்.

ரஜினிக்கு இரட்டை வேடம்
இந்தப் படத்திலும் ரஜினி இரண்டு வேடங்களில் நடிக்கிறார். இரட்டை வேடங்களில் நடித்த அத்தனை படங்களுமே பெரும் வெற்றி என்பதால், இந்த முறையும் அதே பாணி கதையை தயார் செய்துள்ளாராம் கேஎஸ் ரவிக்குமார்.

ஏ ஆர் ரஹ்மான்
இந்தப் படத்துக்கு இசை ஏ ஆர் ரஹ்மான். அனைத்துப் பாடல்களையும் எழுதும் வாய்ப்பு இம்முறையும் வைரமுத்துவுக்குக் கிடைத்துள்ளது.

ரத்னவேலு
படத்தின் ஒளிப்பதிவாளர் ரான்டி என ரஜினி செல்லமாக அழைக்கும் ஆர் ரத்னவேலு. எந்திரனுக்கு ஒளிப்பதிவாளர் இவர்தான்.

மே 20-ல்
படத்தின் பூஜை வரும் மே 20-ம் தேதி சென்னையில் நடக்கிறது. அடுத்த நாளே படக்குழுவுடன் ரஜினி மைசூருக்கு செல்கிறார் படப்பிடிப்புக்காக. தொடர்ந்து 40 நாட்கள் ஒரே ஷெட்யூலில் படத்தை முடிக்கத் திட்டமிட்டுள்ளனர்.

ராக்லைன்
இந்தப் படத்தை தயாரிப்பவர் ராக்லைன் வெங்கடேஷ். கன்னடத்தில் நிறைய படங்கள் பண்ணவர். தமிழில் குத்து, மஜா போன்ற படங்களைத் தயாரித்துள்ளார்.

தீபாவளிக்கு
ரஜினியின் இந்தப் புதுப்படம தீபாவளியை குறி வைத்து தயாரிக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











