ரஜினி இப்போது அரசியலுக்கு வந்தாலும் மகத்தான வெற்றி பெறுவார்-ப.சிதம்பரம்

By Shankar

P Chidambaram
டெல்லி: ரஜினி இப்போது அரசியலுக்கு வந்தாலும் மகத்தான வெற்றி பெறுவது நிச்சயம் என்றார் மத்திய உள்துறை அமைச்சர் ப சிதம்பரம்.

கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் சிறந்த பொழுதுபோக்காளர் என்ற விருது என்டிடிவி சார்பில் நேற்று ரஜினிக்கு வழங்கப்பட்டது.

இந்த விருது வழங்கும் போது பிரணாய் ராய் ரஜினியிடம் கேட்ட கேள்விகளும் அதற்கு ரஜினி அளித்த பதில்களும்:

பிரணாய்: எந்திரன் / ரோபோ மிகப் பெரிய வெற்றியை அடைந்துள்ளது. பாலிவுட்டின் டாப் பிரபலங்கள் ஒன்று சேர்ந்தால்கூட உங்கள் படத்தின் வெற்றியைத் தொட முடியாத நிலை. இதுவரை வந்த படங்களில் எந்திரனை பெஸ்ட் என்று சொல்வீர்களா?

ரஜினி: இதுவரை நடித்த படங்களில் என்று பார்த்தால், எந்திரன் சிறந்த படம்தான்.

பிரணாய்: இந்த விஸ்வரூப வெற்றியை எதிர்ப்பார்த்தீர்களா?

ரஜினி: உண்மையிலேயே இந்த வெற்றியை நான் எதிர்ப்பார்த்தேன். அதே நேரம் இத்தனை பிரமாண்ட வெற்றியாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை.

பிரணாய்: இந்த வெற்றி உங்களுக்கான அங்கீகாரத்தை விஸ்தரித்துள்ளதாக நினைக்கிறேன். உங்கள் கருத்தென்ன சிதம்பரம் அவர்களே...

சிதம்பரம்: நிச்சயமாக. ரஜினி மற்ற மொழிகளிலும் நடித்துள்ளவர். இந்தப் படம் (எந்திரன்) பிற மொழிகளிலும் வந்துள்ளது. இந்தியாவில் அதிக வசூல் குவித்த படம். அதுவும் இந்த தசாப்தத்தின் மிகச் சிறந்த பொழுதுபோக்காளர் ரஜினி படம்.

இந்த பதிலை சிதம்பரம் சற்று தடுமாற்றத்துடன் சொன்னார்.

உடனை மைக்கை வாங்கிய பிரணாய், சிதம்பரம் இப்படி தடுமாற காரணம், நீங்கள் (ரஜினி) எப்போது வேண்டுமானாலும் அரசியலுக்குள் வரலாம் என்பதால் இருக்கலாம்... என்று சிரித்தபடி கூற, உடனே ரஜினியும் சிரித்தார்.

அடுத்த நொடியில் மீண்டும் மைக்கை வாங்கிய சிதம்பரம், "1996ல் ரஜினி அரசியலுக்கு வருவார் என்று உறுதியாக எதிர்ப்பார்த்தேன் நான். அது ஒரு மிகப்பெரிய வாய்ப்பு. எனக்கும் உங்களுக்கும் ஏன் அவருக்கும்கூட அது நன்றாகத் தெரியும். அவர் அப்போது வந்திருக்க வேண்டும்.." என்றார்.

உடனே பிரணாய், "அவர் மிகவும் உணர்ச்சிப்பூர்வமானவர் (சென்சிடிவ்) என்பதால் வரவில்லையோ?" என்றார் ரஜினியின் தோளில் கை வைத்தபடி.

"நாங்கள் சென்சிபிளாக இல்லை என்பதால் அரசியலுக்கு வந்ததாகவோ, அவர் சென்சிடிவ் என்பதால் அரசியலுக்கு வரவில்லை என்றோ சொல்ல முடியாது. ஆனால் இப்போது வந்தாலும் அவர் மகத்தான வெற்றியைப் பெறுவார் (clean sweep)" என்றார் சிதம்பரம்.

எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் அரசியலுக்கு வரும் திட்டம் உண்டா என்று பின்னர் பிரணாய் ராய் நேரடியாக ரஜினியைக் கேட்டபோது, கருத்து சொல்ல விரும்பவில்லை என்றார் ரஜினி வழக்கம்போல.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X