ராணா கைவிடப்படவில்லை... ரஜினி குணமாகி வந்து நடிப்பார்! - கே.எஸ். ரவிக்குமார்

By Shankar

KS Ravikumar
ரஜினி குணமாகி வந்து ராணாவில் நடிப்பார். அந்தப் படம் கைவிடப்பட்டதாக வரும் தகவல்களில் உண்மையில்லை என்றார் இயக்குநர் கே எஸ் ரவிக்குமார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 3 வேடங்களில் நடிக்கும் படம் ராணா. இதில் அவருக்கு ஜோடியாக பிரபல இந்தி நடிகை தீபிகா படுகோனே நடிக்கிறார்.

இந்தப் பட பூஜையின்போதுதான் ரஜினிகாந்த் திடீர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சென்னை மைலாப்பூர் இசபெல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். தொடர்ந்து சென்னையை அடுத்த போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இதன் காரணமாக ராணா படம் கைவிடப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

கே.எஸ்.ரவிக்குமார் அறிக்கை:

இந்த நிலையில் படத்தின் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் மும்பையில் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் அவர் கூறி இருப்பதாவது:

ரஜினி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால் ராணா படம் கைவிடப்பட்டிருப்பதாக வெளியாகிற தகவல்கள் வருத்தம் அளிக்கிறது. உடல் நலக்குறைவால் ஒருவர் பாதிக்கப்படுவது இயற்கை.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் கனவுப்படம் ராணா. அவரது சிந்தனையில் உதித்த படம். எனவே இந்தப்படத்தை வெற்றிகரமாக கொண்டு வருவதில் அவர் மிகுந்த ஆர்வமாக உள்ளார்.

அடுத்த ஆண்டு வெளியாகும்

ரஜினியின் உடல் நலக்குறைவு, இந்தப்படத்தின் படப்பிடிப்பு திட்டத்தில் ஆரம்பத்தில் ஒரு சிறிய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால் அவர் உடல் நலம்பெற்று வருவதில் உறுதியாக உள்ளார். மேலும் ஜுலை மாதத்துக்கு பிறகுதான் தீபிகா கால்ஷீட் தந்துள்ளார்.

எனவே இந்த படம் கைவிடப்பட்டுவிட்டதாக வருகிற தகவல்கள் தவறானவை. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அவ்வளவுதான். சூப்பர் ஸ்டார் வேகமாக உடல் நலம்பெற்று வருகிறார். அடுத்த ஆண்டு ராணா படத்தை வெளியிட்டு விட முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கே.எஸ். ரவிக்குமார் கூறி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X