சந்திரபாபு மகன் கல்யாணம்-ரஜினி வாழ்த்து

By Staff

தெலுங்கு தேச தலைவரும், ஆந்திர மாநில முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடுவின் மகன் திருமணம் ஹைதராபாத்தில் நடந்தது. இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

சந்திரபாபு நாயுடுவின் மகன் லோகேஷுக்கும், மறைந்த என்.டி.ராமாராவின் மகனும், நடிகருமான என்.டி.ஆர்.பாலகிருஷ்ணாவின் மகள் பிராமணிக்கும் கல்யாணம் நிச்சயமானது.

இவர்களது கல்யாணம் நேற்று ஹைதராபாத்தில் நடந்தது. ஹைதராபாத் குண்டுவெடிப்புச் சம்பவத்தால் நகரமே பெரும் சோகத்தில் மூழ்கியிருந்ததால் திருமண வைபவங்கள் எளிமையாக நடந்தது.

திருமணத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். தெலுங்கத் திரையுலகினர், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

ஆந்திர மாநில முதல்வர் ராஜசேகர ரெட்டியின் சார்பில் அமைச்சர் சுரேஷ் ரெட்டி கலந்து கொண்டார்.

மணமகளும், மணமகனும் என்.டி.ஆரின் பேரன், பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X