twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    உருவாகிறது ரஜினி கார்ட்டூன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்த கார்ட்டூன் படம் தயாராக உள்ளது. ரஜினியின் இளைய மகள் செளந்தர்யா ரஜினிகாந்த்தும்,அம்பானிக்குச் சொந்தமான நிறுவனம் இணைந்து இந்த கார்ட்டூன் படத்தைத் தயாரிக்கவுள்ளனர். ரஜினியின் மகள் செளந்தர்யா, ஓஷர் ஸ்டுடியோஸ் என்ற கிராபிக்ஸ் நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இந்த நிறுவனம் தமிழ்த்திரைப்படங்களுக்கு கிராபிக்ஸ் வேலைகளை செய்து தருகிறது. ரஜினியின் சந்திரமுகி, அன்பே ஆருயிரே ஆகிய படங்களுக்குசெளந்தர்யா சில கிராபிக்ஸ் காட்சிகளை வடிவமைத்துக் கொடுத்தார். அதே போல, சிவாஜிக்கும் செளந்தர்யா தான் கிராபிக்ஸ் வடிவமைப்பை செய்துள்ளார். தற்போது தனது தந்தையை வைத்து ஒருகார்ட்டூன் படத்தைத் தயாரிக்க செளந்தர்யா முடிவு செய்துள்ளார். இது தொடர்பாக திருபாய் அம்பானியின் ஆட்லேப்ஸ்நிறுவனத்துடன் செளந்தர்யாவின் ஓஷர் ஸ்டுடியோஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. இதுகுறித்து ஓஷர் ஸ்டுடியோஸ் நிறுவன தலைமை செயல் அதிகாரி வெங்கட் கூறுகையில், உலக அளவில் இதற்கு முன்பு ஜாக்கிசான் குறித்துத் தான் கார்ட்டூன் படம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதற்குப் பிறகு இப்போது ரஜினி காந்த்தை வைத்து கார்ட்டூன்படத்தைத் தயாரிக்கவுள்ளோம். சர்வதேச தரத்தில் இதை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு ரூ. 10 முதல் 12 கோடி வரை பட்ஜெட்போடப்பட்டுள்ளது. தரம் தான் முக்கியம் என்று செளந்தர்யாவும், ஆட்லேப்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளதால் செலவுகுறித்து நாங்கள் கவலைப்படவில்லை. ரஜினிகாந்த் குறித்த மிகவும் சுவாரஸ்யமான கார்ட்டூன் படமாக இது அமையும். அவரது வாழ்க்கைச் சம்பவங்கள் மட்டுமல்லாமல்ரஜினி சம்பந்தப்பட்ட பல விஷயங்களையும் இதில் புகுத்தவுள்ளோம். இந்தப் படத்தை உருவாக்க 18 மாதங்களாகும். பல்வேறு உலக மொழிகளில் இதை கொண்டு வருகிறோம். ஜப்பானில் ரஜினிக்குநல்ல வரவேற்பு இருப்பதால் ஜப்பானிய மொழியிலும் இதை டப் செய்யவுள்ளோம். கார்ட்டூன் படம் என்பதால் டப்பிங் மிகவும் எளிதானது. இருப்பினும் இப்போதைக்கு இந்தி மற்றும் ஆங்கிலத்தில் இதைவெளியிடவுள்ளோம். இந்தப் படத்தின் தலைமை வடிவமைப்பாளராக செளந்தர்யா ரஜினிகாந்த் பணியாற்றுவார். மற்ற குழுவினர் குறித்து இன்னும்முடிவு செய்யவில்லை என்றார் வெங்கட்.

    By Staff
    |

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்த கார்ட்டூன் படம் தயாராக உள்ளது. ரஜினியின் இளைய மகள் செளந்தர்யா ரஜினிகாந்த்தும்,அம்பானிக்குச் சொந்தமான நிறுவனம் இணைந்து இந்த கார்ட்டூன் படத்தைத் தயாரிக்கவுள்ளனர்.

    ரஜினியின் மகள் செளந்தர்யா, ஓஷர் ஸ்டுடியோஸ் என்ற கிராபிக்ஸ் நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இந்த நிறுவனம் தமிழ்த்திரைப்படங்களுக்கு கிராபிக்ஸ் வேலைகளை செய்து தருகிறது. ரஜினியின் சந்திரமுகி, அன்பே ஆருயிரே ஆகிய படங்களுக்குசெளந்தர்யா சில கிராபிக்ஸ் காட்சிகளை வடிவமைத்துக் கொடுத்தார்.

    அதே போல, சிவாஜிக்கும் செளந்தர்யா தான் கிராபிக்ஸ் வடிவமைப்பை செய்துள்ளார். தற்போது தனது தந்தையை வைத்து ஒருகார்ட்டூன் படத்தைத் தயாரிக்க செளந்தர்யா முடிவு செய்துள்ளார். இது தொடர்பாக திருபாய் அம்பானியின் ஆட்லேப்ஸ்நிறுவனத்துடன் செளந்தர்யாவின் ஓஷர் ஸ்டுடியோஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.


    இதுகுறித்து ஓஷர் ஸ்டுடியோஸ் நிறுவன தலைமை செயல் அதிகாரி வெங்கட் கூறுகையில், உலக அளவில் இதற்கு முன்பு ஜாக்கிசான் குறித்துத் தான் கார்ட்டூன் படம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதற்குப் பிறகு இப்போது ரஜினி காந்த்தை வைத்து கார்ட்டூன்படத்தைத் தயாரிக்கவுள்ளோம்.

    சர்வதேச தரத்தில் இதை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு ரூ. 10 முதல் 12 கோடி வரை பட்ஜெட்போடப்பட்டுள்ளது. தரம் தான் முக்கியம் என்று செளந்தர்யாவும், ஆட்லேப்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளதால் செலவுகுறித்து நாங்கள் கவலைப்படவில்லை.

    ரஜினிகாந்த் குறித்த மிகவும் சுவாரஸ்யமான கார்ட்டூன் படமாக இது அமையும். அவரது வாழ்க்கைச் சம்பவங்கள் மட்டுமல்லாமல்ரஜினி சம்பந்தப்பட்ட பல விஷயங்களையும் இதில் புகுத்தவுள்ளோம்.


    இந்தப் படத்தை உருவாக்க 18 மாதங்களாகும். பல்வேறு உலக மொழிகளில் இதை கொண்டு வருகிறோம். ஜப்பானில் ரஜினிக்குநல்ல வரவேற்பு இருப்பதால் ஜப்பானிய மொழியிலும் இதை டப் செய்யவுள்ளோம்.

    கார்ட்டூன் படம் என்பதால் டப்பிங் மிகவும் எளிதானது. இருப்பினும் இப்போதைக்கு இந்தி மற்றும் ஆங்கிலத்தில் இதைவெளியிடவுள்ளோம்.

    இந்தப் படத்தின் தலைமை வடிவமைப்பாளராக செளந்தர்யா ரஜினிகாந்த் பணியாற்றுவார். மற்ற குழுவினர் குறித்து இன்னும்முடிவு செய்யவில்லை என்றார் வெங்கட்.

      Read more about: a cartoon film on rajini
      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X