ஜோதிகாவிடம் மன்னிப்பு கேட்பாராம் ரஜினி... சந்திரமுகி பற்றி பிரபு
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கிவிட்டது. இதற்காக சென்னையில் பிரம்மாண்ட ஜெயில் செட் ஒன்று போடப்பட்டுள்ளது.
Recommended Video
ரஜினிகாந்த் அவர்களுக்கு கடைசியாக பிளாக்பஸ்டர் ஆன படம் என்று சொன்னால் சிவாஜி மற்றும் சந்திரமுகிதான்
இந்நிலையில் சந்திரமுகி திரைப்படத்தின் தயாரிப்பாளரான நடிகர் பிரபு சமீபத்தில் அதில் நடந்த சுவாரசியமான தகவல்களை பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

யானை டூ குதிரை
படையப்பா என்கிற மிகப் பெரிய இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்த பின்னர் ரஜினிகாந்த் நடித்த பாபா திரைப்படம் மண்ணைக் கவ்வியது. ரசிகர்களாலும் விமர்சகர்களாலும் வரவேற்கப்படாத படமாக பாபா அமைந்தது. அதன் பின்னர் சிறிய இடைவெளிக்கு பிறகு அவர் நடித்த படம்தான் சந்திரமுகி. அந்தப் படத்தின் நிகழ்ச்சியின்போது கூட நான் விழுந்தால் தாமதமாக எழுவதற்கு யானை அல்ல குதிரை. விழுந்ததை விட அதிக வேகத்தில் எழுந்து ஓடுவேன் என்று சந்திரமுகி திரைப்படத்தின் வெற்றியை சொல்லி அடித்தார்.

சிம்ரன் டூ ஜோதிகா
முதலில் அந்தப் படத்தில் சந்திரமுகி கதாபாத்திரத்தில் ஒப்பந்தமானது நடிகை சிம்ரன்தான். அப்போது நம்பர் ஒன் நடிகையாக இருந்த சிம்ரன் ரஜினிகாந்தை தவிர அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்துவிட்டார். இந்தப் படத்தில் அவருடன் நடிக்கிறார் என்றதும் எதிர்பார்ப்பு உண்டானது. ஆனால் திடீரென்று அவர் கர்ப்பம் ஆனதும் அந்தப் படத்திலிருந்து விலக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அதன் பின்னர் யாரை நடிக்க வைக்கலாம் என்று படக்குழுவினர் யோசித்தபோது அனைவரும் ஜோதிகா நடித்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தார்களாம்.

தயங்கிய ரஜினி
அன்றைய காலக்கட்டத்தில் யாருடன் நடிக்க வேண்டும் என்று முடிவெடுக்கும் அளவில் அப்போதிருந்த இளம் நடிகைகளான சிம்ரன் மற்றும் ஜோதிகா போன்றவர்கள் இருந்தார்களாம். ஏற்கனவே சிம்ரன் விலகியதால் இப்போது ஜோதிகா பிரபுவிற்கு ஜோடியாக நடிக்க சம்மதிப்பார்களா என்று ஒரு பக்கம் படக்குழுவினர் யோசிக்க, இன்னொரு பக்கம் சந்திரமுகி கேரக்டரை ஜோதிகா சிறப்பாக பண்ணிவிடுவாரா என்று ரஜினி யோசித்தாராம். முதல் நாள் படப்பிடிப்பில் பெட்டியிலிருந்து நகையை எடுத்துக் காட்டும் ஜோதிகா திடீரென்று சந்திரமுகியாக மாறுவார். அந்த ஷாட்டை எடுத்ததும்தான் ரஜினிகாந்த்துக்கு மிகப்பெரிய நம்பிக்கை வந்ததாம் ஜோதிகாதான் சந்திரமுகி என்று.

மன்னிப்பு கேட்ட ரஜினி
பிரபு அந்தப் படத்திற்கு தயாரிப்பாளர் என்பதால் பிரபுவும் ரஜினிகாந்த்தும் சேர்ந்துதான் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு செல்வார்களாம். இவர்கள் வரும்போதெல்லாம் ஜோதிகா ஏற்கனவே மேக்கப்புடன் தயாராக அமர்ந்திருப்பாராம். ரஜினிகாந்த் ஜோதிகாவிடம் சென்று ஹீரோயின் மேடம் மன்னித்து விடுங்கள் நாங்கள் லேட்டாக வந்துவிட்டோம் சாரி என்று விளையாட்டாக சொல்வாராம். அதேபோல பிரபு என்று பேர் சொல்லி வழக்கமாக அழைக்கும் ரஜினி சில சமயம் குறும்புத்தனமாக தன்னைப் பார்த்து ப்ரொடியூசர் சார் என்று அவ்வப்போது கலாட்டா செய்வார் என்று பிரபு அந்த பேட்டியில் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











