twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தான் நடித்த பாடல்கள் பற்றியே ரஜினிக்கு தெரியவில்லை... மறைந்த கவிஞர் வாலியின் முன்னாள் பேட்டி

    |

    சென்னை: தமிழ் சினிமாவின் உச்சபட்ச கவிஞராக விளங்கிய கண்ணதாசன் இருந்த காலக் கட்டத்திலேயே தனக்கென ஒரு இடம் பிடித்தவர் வாலி.

    அதுமட்டுமின்றி மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களின் ஆஸ்தான கவிஞராக வாலி பல படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார்.

    வாலி அவர்கள் முன்னதாக கொடுத்துள்ள ஒரு பேட்டியில் எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் போல அடுத்து வந்த எந்த நடிகருக்கும் பாடல்கள் மீது அக்கறையில்லை என்று வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

    விஜய்க்கு அவ்வளவு தான் மரியாதை..தமிழ் சினிமா மார்க்கெட்டை ஏன் கெடுக்கிறீர்கள்..கே.ராஜன் விளாசல்!விஜய்க்கு அவ்வளவு தான் மரியாதை..தமிழ் சினிமா மார்க்கெட்டை ஏன் கெடுக்கிறீர்கள்..கே.ராஜன் விளாசல்!

     வாலி எம்.ஜி.ஆர் நட்பு

    வாலி எம்.ஜி.ஆர் நட்பு

    எம்.ஜி.ஆரின் பல வெற்றிப் பாடல்களை எழுதியவர் வாலி. அவர் எழுதிய பாடல்கள்தான் பின்னர் தேர்தல் நேரத்தில் இன்றுவரை ஒலிபரப்பப்படுகிறது. எம்.ஜி.ஆருக்கு முதல் நாள் வைத்த மீன் குழம்பு மறுநாள் காலையில் தினமும் உண்ணும் பழக்கம் இருந்ததாம். அதை உண்பதற்காகவே பெரும்பாலும் வாலி அவரை காலையில் சந்திக்கச் செல்வாராம். அந்த அளவிற்கு ஒரு நடிகருக்கும் கவிஞருக்கும் நட்பு இருந்துள்ளது.

     சிவாஜி வாலி கூட்டணி

    சிவாஜி வாலி கூட்டணி

    எம்.ஜி.ஆருக்கு அதிக பாடல்கள் எழுதிய காரணத்தினாலேயே ஆரம்ப காலகட்டத்தில் சிவாஜி கணேசன் படங்களுக்கு பாடல்கள் எழுத வாய்ப்பு அமையவில்லையாம் வாலிக்கு. அதன் பின்னர் அவருடைய படங்களுக்கும் எழுத ஆரம்பித்த வாலி எம்.ஜி.ஆர் படங்களை விட சிவாஜி படங்களுக்குத்தான் அதிகமாக எழுதியுள்ளதாக கூறியிருக்கிறார். எம்.ஜி.ஆரும் சிவாஜியும் பாடல்கள் எழுதும்போது உடன் இருப்பார்கள். அதேபோல அந்தக் காலத்தில் கவிஞர்கள் இல்லாமல் பாடல் பதிவும் நடைபெறவே பெறாது.

     இரவு நேர பதிவு

    இரவு நேர பதிவு

    இப்போதுள்ள இசையமைப்பாளர்கள் பெரும்பாலும் இரவில்தான் இசையமைத்து பாடல்களை பதிவு செய்கிறார்கள். அதன் காரணமாகவே பாடல் பதிவின்போது என்னால் கலந்து கொள்ள முடியவில்லை. யுவன் சங்கர் ராஜாவை நான் சந்தித்து பத்து ஆண்டுகள் ஆகிறது. ஆனால் தொடர்ச்சியாக யுவன் இசையில் பாடல்கள் எழுதிக் கொண்டிருக்கிறேன். இப்படி இரவில் பாடல் பதிவு நடைபெறுவதாலேயோ என்னவோ எந்த நடிகரும் பாடல்களின் விவரங்களை நேரம் ஒதுக்கி கேட்பதில்லை என்று வாலி கூறியிருக்கிறார்.

     வாலி கேட்ட கேள்வி

    வாலி கேட்ட கேள்வி

    ஒருமுறை வாலியும் ரஜினியும் நேரில் சந்தித்தபோது, ரஜினிகாந்த் நடித்த பல பாடல்களை குறிப்பிட்டு, இந்தப் பாடல்களை யார் எழுதியது என்று கேட்டாராம். அதற்கு தெரியவில்லை என்று ரஜினி கூறியிருக்கிறார். அப்போது, இவை அனைத்தும் நான் எழுதிய பாடல்கள்தான் என்று வாலி கூறினாராம். அப்படிப்பட்ட வாலி அவர்கள் எம்.ஜி.ஆர் தொடங்கி சிவகார்த்திகேயன் வரை அனைத்து முன்னணி நடிகர்களுக்கும் பாடல்கள் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Vaali made a place for himself in the era of Kannadasan who was the supreme poet of Tamil cinema. Apart from that Vaali has written songs for many films and acted as the poet of Makkal Thilagam MGR's . In an earlier interview given by Vali, MGR had openly said that any actor who came after Sivaji Ganesan did not care about songs.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X