»   »  ஒரே 'சூப்பர் ஸ்டார்' தான்-விஜய்

ஒரே 'சூப்பர் ஸ்டார்' தான்-விஜய்

Posted By:
Subscribe to Oneindia Tamil
Click here for more images
தமிழ் திரையுலகின் அன்றும், இன்றும், என்றும் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்திற்கு சொந்தக் காரர் ரஜினிகாந்த் மட்டுமே, அது வேறு எவருக்கும் பொருந்தாது என்று கூறியுள்ளார் நடிகர் விஜய்.

விஜய் தனது ரசிகர் மன்றங்கள் மூலமாக சத்தம் போடாமல் பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். இந் நிலையில் திருவண்ணாமலை மாவட்ட விஜய் நற்பணி மன்றத்தின் 10வது ஆண்டு நிறைவு விழாவையொட்டி உதவிகள் வழங்கும் விழா விஜய் தலைமையில் கொட்டும் மழையில் திருவண்ணாமலையில் நடைபெற்றது.

கன மழையிலும் இந்த விழாவிற்கு வந்திருந்த ஆயிரக்கணக்கானவர்களைப் பார்த்து அசந்து போனார் விஜய்.

நிகழ்ச்சியில் பேசிய விஜய், நான் சினிமாவுக்கு வரும் முன் என் தந்தை எனக்கு நடிப்பு டெஸ்ட் வைத்தார். அதில் ரஜினி சார் நடித்த அண்ணாமலை படத்தின் வசனத்தை பேசித் தான் அந்த டெஸ்டை பாஸ் செய்து சினிமாவில் நடிக்க வாய்ப்பு பெற்றேன்.

தற்போது தான் நடித்து தீபாவளிக்கு வெளிவரவுள்ள அழகிய தமிழ் மகன் படத்தை ரசிகர்கள் அனைவரும் பார்த்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார்.

அப்போது ஒரு ரசிகர் நீங்கள் தானே அடுத்த சூப்பர் ஸ்டார் என்று கேட்க, வேகமாக தலையை ஆட்டி அதை மறுத்த விஜய், அண்ணா.. தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டார் என்றால் அது நமது ரஜினி சார் மட்டும் தான். அவர் போல் எவரும் நடிக்க முடியாது. அன்றும், இன்றும், என்றும் கோலிவுட்டின் சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினி சார். புரியுதா அண்ணா என்றார்.

Read more about: rajini vijay

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil