ரஜினிகாந்த் சொன்ன அந்த எட்டு வருஷ கணக்கு.. இயக்குநர் சுந்தர் சி பகிர்ந்த சுவாரசிய தகவல்!

சென்னை : அண்ணாத்த கொடுத்த மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்

ரஜனிகாந்த், நெல்சன் இணையும் படத்தின் படப்பிடிப்பு மிக விரைவிலேயே தொடங்க உள்ளது என படக்குழு அறிவித்துள்ளது

இந்த நிலையில் இயக்குநர் சுந்தர் சி இடம் ரஜினிகாந்த் எட்டு வருடக் கணக்கு குறித்து பேசியது பற்றி இயக்குநர் சுந்தர் சி தனியார் யூடியூப் சேனலில் பகிர்ந்துள்ளார்

அண்ணாத்த

அண்ணாத்த

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் தமிழில் மட்டுமல்லாமல் அனைத்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெறுவதோடு மற்ற மொழிகளில் வெளியாகி அங்கும் வசூல் செய்து வருகிறது.அஜித்துடன் இணைந்து வீரம், விஸ்வாசம், விவேகம்,வேதாளம் என தொடர்ந்து படங்களை இயக்கி வந்த சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி முதல் முறையாக இணைந்த திரைப்படம் அண்ணாத்த பெரும் எதிர்பார்ப்புக்கு பின்னர் வெளியாகி குடும்ப ரசிகர்கள் கொண்டாடும் மாபெரும் வெற்றிப்படமாக ஆனது.

 தங்கையாக கீர்த்தி சுரேஷ்

தங்கையாக கீர்த்தி சுரேஷ்

சந்திரமுகி, தர்பார் உள்ளிட்ட படங்களைத் தொடர்ந்து ரஜினிகாந்துக்கு ஜோடியாக இந்த படத்தில் நயன்தாரா நடித்து கலக்கி இருப்பார். மேலும் குஷ்பு, மீனா ,யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
முற்றிலும் கிராமத்து கதை களத்தில் உருவான இந்த படத்தில் ரஜினிகாந்துக்கு தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடித்து அனைவரது பாராட்டுக்களையும் பெற்றிருப்பவர்

 நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார்

நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார்

கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் என ஹாட்ரிக் வெற்றிகளை கொடுத்த இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தின் முதற்கட்டப் பணிகள் மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்க மிக விரைவிலேயே படப்பிடிப்பு தொடங்கப்படும் என படக்குழு அறிவித்திருந்தது.

 எட்டு வருஷ கணக்கு

எட்டு வருஷ கணக்கு

இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் அருணாச்சலம். அப்பொழுது படப்பிடிப்பில் இருந்த சமயத்தில் ரஜினிகாந்த் 8 வருஷ கணக்கு குறித்து சுந்தர் சி இடம் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது. ஆண்டவன் எல்லாருக்கும் 8 வருடத்திற்குள் வெற்றியைக் கொடுப்பார். அந்த வெற்றியை சரியாக யூஸ் பண்ணிக்கனும்.. அதற்கு மறுப்பு தெரிவித்த சுந்தர் சி உங்களுக்கு இருபது வருஷத்துக்கு மேல ஆச்சு நீங்க இன்னும் மேல மேல தான் போய்கிட்டு இருக்கீங்க எனக் கூறினாராம்.

 அசுரவேகத்தில் சுத்துது

அசுரவேகத்தில் சுத்துது

அதற்கு ரஜினிகாந்த அந்த எட்டு வருஷம் அப்படிங்கறது டியூப்லைட் மாதிரி இல்ல ஃபேன் மாதிரி. ஃபேன் சுவிட்ச் ஆஃப் பண்ணதுக்கப்புறம் கொஞ்சம் கொஞ்சமா ஸ்லோவா நின்றும்.. அதுக்கு அப்புறம் நானே தாவி தாவி குதித்து குதித்து நிலைக்கனும் என கூறினாராம். அதை நம்பாத சுந்தர் சி உங்க ஃபேன் மட்டும் போக போக பாஸ்டா சுத்துது இப்போ அசுரவேகத்தில் சுத்துது என கூறினாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X